Saturday , December 15 2018
Home / Tamilnadu Police / தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.

தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ளு-14 பீர்க்கன்கரணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (23.01.2018) குன்றத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முடிச்சூர் நேரு காலனி, லஷ்மி நகர் 1 வது தெருவில் உள்ள வீட்டை கண்காணித்த போது அங்கு தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.திலீப், வ/21, த/பெ.ஜதன்ராம், எண்.35, நேரு டிம்பர் மார்கெட், சூளை 2. சங்கர், வ/20, த/பெ.தீவாராம், சூளை ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 140 கிலோ மாவா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (23.01.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாடி, ஜெகதாம்பிகை நகர், திருவள்ளுவர் தெருவில் உள்ள வீட்டில் கண்காணித்த போது அங்கு பெருமளவில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த 1.பாலசுப்பிரமணியன், வ/53, த/பெ.ராமச்சந்திரன், எண்.90, திருவள்ளுவர் தெரு, ஜெகதாம்பிகை நகர், பாடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 200 பண்டல் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், என்-3 முத்தையால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (23.01.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது மண்ணடி, பவளக்கார தெருவில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.காமராஜ், வ/37, த/பெ.சிவலிங்கம், மண்ணடி 2. சுப்பிரமணி, வ/42, த/பெ.சந்திரன், எண்.6, எஸ்.வி.கோவில் தெரு, மண்ணடி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 350 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.