Monday , February 19 2018
Home / Business / டோயட்டோ கிர்லோஷ்கர் மோட்டார் இந்தியாவில் புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனத்தை அறிமுகம் செய்கிறது

டோயட்டோ கிர்லோஷ்கர் மோட்டார் இந்தியாவில் புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனத்தை அறிமுகம் செய்கிறது

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க எம்பிவி வாகனம் இப்போது ஸ்போர்ட்டி என்கிற அவதாரத்துடன் வந்துள்ளது

 இந்த இன்னோவா வாகனமானது டூரிங் ஸ்போர்ட் என்கிற அம்சத்துடன் ஸ்போர்ட்டி அம்சங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

 டோயட்டோ முகவர்களிடம் இதற்கான முன்பதிவுகள் இப்போதே தொடங்கியுள்ளன.

 வாகனங்களின் விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

  Innova Touring Sport Interior

பெட்ரோல்-நாமாக இயக்குவது Rs. 17,79,000
பெட்ரோல் தானியங்கி Rs. 20,84,500
டீசல்-நாமாக இயக்குவது Rs. 18,91,000
டீசல்-தானியங்கி Rs. 22,15,500

 

வாகனத்தின் முக்கிய அம்சங்கள்:

வெளிப்புற வடிவமைப்புகள்:

புதிய கருப்பு நிறத்திலான அலாய் சக்கரங்கள்

முப்பரிமாண வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீட்டர் மற்றும் பலதரப்பட்ட தகவல்கள் அளிக்கும் திரையமைப்பு.

2.8 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ற அளவுகளில் விற்பனைக்கு உள்ளன.

விபத்திலிருந்து காக்கக் கூடிய ஏழு காற்றுப் பைகள்.

வாகனத்தை கட்டுப்பாட்டுடன் இயக்குவதற்கான அமைப்பு.

மலைப்பகுதிகளில் பாதுகாப்பாகச் செல்வதற்கான சிறப்பு கட்டுப்பாட்டு வசதி.

இந்த வசதிகளுடன் எல்க்ட்ரானிக் பிரேக் அமைப்பு, இருக்கைகளின் உயரத்தை ஏற்றி-இறக்கும் வசதி, குழந்தைகள், சிறுவர்களைக் காக்கும் வகையில் மூன்று முனை சீட் பெல்ட் வசதி போன்ற பல அம்சங்கள் இருக்கின்றன.

சென்னை, மே 4, 2017: இன்னோவா பிராண்ட் வகையில் முதல் முறையாக டூரிங் ஸ்போர்ட் அம்சங்கள் அடங்கிய புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனத்தை டோயட்டோ கிர்லோஷ்கர் மோட்டார் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எம்பிவி மற்றும் எஸ்யூவி வாகனங்களைப் போன்றே இன்னோவா டூரிங் ஸ்போர்டிஸ் வாகனமானது தனித்துவமிக்க வெளிப்புற டிசைன், விளையாட்டு வாகனம் போன்ற அமைப்புடன் உயர்ரக பாதுகாப்பு மற்றும் செயலாற்றுடன் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டுப் பிரிவு வாகனம் போன்ற இந்த புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகநத்தில் பல புதிய வடிவமைப்பு அம்சங்கள் தகுந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருப்பு நிறுத்துடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள முன்புறம், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த முகப்பு விளக்குகள் என பல புதிய விஷயங்களை இணைத்து வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இருக்கையில் சிவப்பு நிற தையல்கள் மற்றும் இருக்கைகளுக்கு நடுவிலான சிறிய அளவிலான பெட்டி போன்றவை விளையாட்டுப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் வாகனத்தின் தோற்றத்தைத் தருகிறது. இந்தப் புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனமானது அடர் சிவப்பு நிறத்துடன் வெள்ளை முத்துவின் பளபளப்பு நிறம் கலந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்டா வாகனத்தின் செயல்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனம் அமைந்திருக்கிறது. இது இரண்டு டீசல் என்ஜின்கள் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆகிய வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.

இவை 2.8 லிட்டர் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு தானியங்கி அமைப்பாகவும், 2.4 லிட்டர் டீசல் என்ஜினுடன் 5 ஸ்பீடு நாமாக இயக்கும் அமைப்பாகவும், பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனமானது 2.7 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு தானியங்கி அமைப்பில் விற்பனைக்கு உள்ளன.

இதுகுறித்து, டோயட்டோ கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் வணிகம்) திரு என்.ராஜா பேசியதாவது:

இன்னோவா பிரிவில் இருந்து இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். கடந்த 2005 ஆம் ஆண்டு இன்னோவா வாகனமானது தனது பிரிவில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்னோவா கிரிஸ்டா வாகனம் வெளியிடப்பட்டது. இப்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்திடும் வகையிலும் எம்பிவி மற்றும் எஸ்யூவி வாகனங்களின் வசதியை பெறும் வகையிலும் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனத்தின் ஸ்டைல் மற்றும் ஒட்டுமொத்த ஈர்ப்பில் நாங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கிறோம். இளம் மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்காக ஸ்போர்டி எம்பிவி வாகனத்தின் அனுபவத்தைத் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த இந்த வாகனச் சந்தையில் இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனமானது ஒரு புதிய சாதனை மைல்கல்லை எட்டும் என நம்புகிறோம்.

இன்னோவா கிரிஸ்டா வாகனமானது அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இப்போது மற்றொரு மைல்கல்லாக இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னோவா கிரிஸ்டா வாகனத்துக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. ஓராண்டில் மட்டும் 85 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்தியாவில் விற்றுள்ளன. எம்பிவி வாகனப் பிரிவில் டோயட்டோ தயாரிப்புகள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. 1997-இல் குவாலிஸ் வாகனங்களும், பின்னர் 2005 ஆம் ஆண்டில் இருந்து இன்னோவா வாகனங்களும் எம்பிவி பிரிவை நிறைத்து வருகின்றன. இந்தியாவில் இன்னோவா வாகனமானது தனது தலைமை நிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இதற்கு மேலும் வலுசேர்த்திடும் வகையில் இன்னோவா கிரிஸ்டா கடந்த ஆண்டு இதே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னோவா கிரிஸ்டா என்பது வீட்டில் பயன்படுத்தக் கூடிய ஒரு பெயராக மாறிய நிலையில் இப்போது நாங்கள் ஓராண்டினை இந்தியாவில் கொண்டாடுகிறோம். இன்னோவா வாகனத்துக்கு தொடர்ந்து ஆதரவினைத் தெரிவித்து வரும் எங்களது நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாகனச் சந்தையானது இப்போது முற்றிலும் வேறுபட்ட நிலையில் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எம்பிவி மற்றும் எஸ்யூவி வாகனப் பிரிவில் தேவையை நிறைவேற்றும் வகையில் புதிய இன்னோவா டூரிங் ஸ்போர்ட் வாகனம் விளங்கும்.

எங்களுடைய வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய டூரிங் ஸ்போர்ட் வாகனமானது, புதிய டிசைன், அதிநவீன தொழில்நுட்பங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இன்னோவா என்ற பிராண்டை மேலும் உயர்த்திடும் வகையில் புதிய வாகனம் விளங்கும் என்றார்.

இந்தப் புதிய வாகனமானது ரூ.17,79,000 முதல் 22,15,500 (புதுதில்லியில் விலை) விற்பனைக்கு உள்ளது. முன்பதிவுகள் மே 4 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன.

டோயட்டோ கிர்லோஷ்கர் பற்றி…

கம்பெனி பெயர் டோயட்டோ கிர்லோஷ்கர்
பங்கு விவரம் டோயட்டோ மோட்டார்: 89%,  கிர்லோஷ்கர்: 11%
பணிபுரிவோர் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
உற்பத்தி நிறுவுதிறன் 3, 10,000 யூனிட்கள்.

 முதல் ஆலை:

 

தோற்றம் அக்டோபர் 1997 (உற்பத்தித் தொடக்கம்: டிசம்பர் 1999)
அமைவிடம் பிடாடி
தயாரிப்புகள் இன்னோவா, பார்ட்சுனர் இந்தியாவில்

ப்ராடா, லாண்ட் க்ரூஸர், ப்ரயஸ் இறக்குமதி செய்யப்படுபவை

உற்பத்தி திறன் 1,00,000 யூனிட்கள்.

 

இரண்டாவது ஆலை…       

 

தயாரிப்பு தொடக்கம் டிசம்பர் 2010
அமைவிடம் பிடாடி
தயாரிப்புகள் கோரல்லா ஆல்டில், இடியோஸ், இடியோஸ் லிவா, காம்ரே, காம்ரே ஹபிரிட்
உற்பத்தித் திறன் 2,10,000 யூனிட்கள்.

About Ragavendhar

Check Also

Tamil Nadu’s latest General Entertainment channel COLORS Tamil donates Rs. 30 Lakhs to Nadigar Sangam

Chennai,  February, 2018: Tamil Nadu’s latest entrant in the general entertainment space, COLORS Tamil channel …