Thursday , September 19 2019
Home / District-News / டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு – ஒரு புதிய உதயம்

டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு – ஒரு புதிய உதயம்

கஜா புயலால் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிற்க டெல்டா மாவட்டங்களை இயல்பு  நிலைக்குக் கொண்டுவரும் பொருட்டு  நடிகர் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்  பல்வேறு துறைசார்த்த அறிஞர்களும் ஒன்றிணைந்து  “டெல்டா மாவட்ட மறு கட்டமைப்பு குழு” வை உருவாக்கியிருக்கிறார்கள். 
அதன் நோக்கம் மற்றும் , பணிகளைப் பற்றி இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் ஆரி, நல்லோர் வட்டம் பாலு, ஜெகன்,ஹரி, பூவுலகின்  சுந்தர்ராஜன் ,  இன்ஸ்பையர் ரேவதி,தினேஷ்,  ஆகியோர் கலந்துகொண்டு விளக்கினர்.
ஆரி பேசும் போது, “ டெல்டா மாவட்ட மறுகட்டமைப்பு குழுவை அறிமுகப்படுத்தி எதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது என்பதை விளக்கினார். 
காஜா புயல் கடந்த மாதம்15ம் தேதி இரவு தொடங்கி 16 காலை வேதாரண்யத்தில் கரையை கடந்தது இதில் பல லட்சக்கணக்கான மரங்களும்  சுமார்   71 பேர்  மரணித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை  14 பேர் என்றானது. இவர்களை மீட்டெடுக்க ஒரு கை போதாது ஓராயிரம் கைகள் வேண்டும் .
சென்னை வர்தா புயலில் நாம் கார் பைக் போன்ற வாகனங்களைதான் இழந்தோம் ஆனால் டெல்டா மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் இந்த மக்களை மீட்கவே இந்த டெல்டா மாவட்ட மறுசீரமைப்பு குழு உருவாக்கப்பட்டது .
 எங்களது பணிகள்  பெரும்பாலும் உதவி தேவைப்படுபவர்களையும் உதவி செய்பவர்களையும் இணைப்பதே. 
புயல் பாதித்த அடுத்த நாளிலிருந்தே களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களிடம் புயல் சேதம் குறித்தான துல்லியமான விபரங்கள் தர இருக்கின்றனர். பெரு நிறுவனங்கள் ஆண்டு தோறும் சேவைக்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ச் செலவு செய்கிறார்கள்.  அவர்களிடம் கழிப்பறைகள், வீடுகள் இன்ன பிற அத்தியாவசிய த் தேவைகளுக்கான பட்ஜெட் ஐ சொல்லி அவர்களது பிரதிகளே நேரிடையாக பணிசெய்யுமாறு பணிக்கின்றோம். நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை.மாறாக ஒவ்வொரிடம் இருந்தும் ஆதரவையும்நல்ல ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
எங்கள் குழுவில் இருப்பவர் இதுவரை  37000 குடும்பங்களுக்கு நேரடியாக  நிவாரணங்களை வழங்கியுள்ளார்கள் 1000 கிராமங்களை மேல் தத்தெடுக்கும் முயற்சியில் உள்ளோம்   290 கிராமங்களில் இன்றும் கலப்பணியாற்றி வருகிறோம்.  

சாய்ந்த மரங்களை இன்னும் கணக்கெடுக்காததால் அப்புறப்படுத்த முடியவில்லை. அரசு உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்தினால் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும்..
 ஒரு சிலரால் மட்டுமே மறுசீரமைப்பு பணிகளை ச் செய்து விடமுடியாது. ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.
நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனை வழங்குவதுடன்,
மாற்று விவசாயம் செய்ய உதவுதல், வண்ண மெழுகுவர்த்தி, பாக்குமட்டை தட்டுகள்   தயாரித்தல் போன்ற  மாற்று தொழில்கள் தொடங்கவும் ஏற்பாடு செய்யவும் அப்படி தயாரித்த பொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்ய உள்ளோம் .
மேலும் உதவிகள் தேவைப்படுவோர்கள் மற்றும்  ஆலோசனைகள் வழங்குபவர்கள் எளிதில் தொடர்புகொள்ள ஏதுவாக    ஒரு டோல் பிரீ Toll Free Number ஐயும் இணையதளத்தையும் விரைவில் அறிமுகம் செய்து  ஒவ்வொரு பாதிக்கப்பட்ட கிராமங்களிலும் ஒரு  பொருப்பாளர்களை நியமித்து அங்குள்ள சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட  மக்களின் புள்ளி விவரங்களை வலைதளங்களில் பதிவேற்றி அரசும், உதவும் எண்ணம் கொண்டவர்களும் நேரடியாக உதவ ஒரு பாலமாக  செயல்பட உள்ளோம் என்றார். 
மேலும், இந்த மறுசீரமப்பு குழு, தமிழகத்தில் எதிர்காலத்தில் எங்கு பேரிடர்கள் நடந்தாலும் உடனடியாகக் களத்தில் இறங்கும் பொருட்டு ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் எனவும் கூறினார்.

About Admin

Check Also

கோட்டுர்புரம் குடிசை பகுதி மாற்றம் வாரியத்திடம் மனு அளித்தனர்

கோட்டுர்புரம் குடிசை பகுதி மாற்றம் தொடர்பாக குடிசை மாற்று வாரியத்தில் KKNS சங்க நிர்வாகிகள் மற்றும் நமது சட்ட மன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.