Friday , February 23 2018
Home / Uncategorized / ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி -இறுதி வரி விகிதங்களை முடிவு செய்ய டெல்லியில் நாளை கவுன்சில் கூட்டம்

ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி -இறுதி வரி விகிதங்களை முடிவு செய்ய டெல்லியில் நாளை கவுன்சில் கூட்டம்

நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்க வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரியில், இறுதி வரி விகிதங்களை முடிவு செய்ய 16-வது கவுன்சில் கூட்டம் நாளை டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வருகிறது. இந்த வரி விதிப்பை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விகிதங்களை முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாநிலங்கள், பல பொருட்களின் வரி விகிதங்களை மாற்றியமைக்க வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெறவுள்ளது. மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறவுள்ள இந்த 16-வது கவுன்சில் கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

About Admin

Check Also

92.7 BIG FM CHENNAI CELEBRATES BIG KALAKKALPONGAL

Chennai,  January, 2018: BIG FM, one of India’s largest radio networks, celebrated the first calendar festival …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *