Sunday , December 16 2018
Home / Tamilnadu Police / ஜாம்பஜார் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

ஜாம்பஜார் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது.

சென்னையில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, னு-4 ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.3.2018) திருவல்லிக்கேணி பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாரதி சாலையில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது அங்கு வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதன்பேரில், அனுமதியின்றி வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை விற்பனை செய்த மணிகண்டன், வ/41, த/பெ.ராதாகிருஷ்ணன், மசூதி தெரு, திருவல்லிக்கேணி என்பவரை செய்தனர். அவரது கடையிலிருந்து 37 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.