Monday , May 20 2019
Home / State-News / ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா கோவையில்

ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா கோவையில்

கோவை ஜல்லிக்கட்டு சங்கம் -2019 மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நாளை L&T பைபாஸ் சாலையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் நடைபெறும் இடத்தில் கோமாதா பூஜை இன்று நடந்தது.
கோவை ஜல்லிக்கட்டு தலைவர் சமூக ஆர்வலர் எஸ். பி அன்பரசன் கோமாதா பூஜை துவக்கி வைத்து பசுமாடுகளுக்கு பழங்களை வழங்கினார்.

உடன் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கூறியுள்ளதாவது :- நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையிலுள்ளது. இதற்காக, 30 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவைக் காண வருகை தரும் பொதுமக்கள், விவசாய பெருங்குடி மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான பார்வையாளர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.