சென்னை: 2018 அக்டோபர் : பிரபல சோனி இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது எஸ்எஃ-ஜீ வரிசையை உலகின் உறுதியான எஸ்டி கார்ட் – யுஹெச்எஸ்-II எஸ்டி கார்ட் அறிமுகம் மூலம் விரிவுபடுத்தி உள்ளது. இந்த வரிசைக்கான புதிய அறிமுகத்தில் தொழில்முறை நிழற்படக் கலைஞர்கள், டிஎஸ்எல்ஆர், மிரர்லெஸ் கேமரா பயனீட்டாளர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் ஆகியோருக்கான பிரத்யேகச் சிறப்பு அம்சங்கள் உள்ளன. புதிய எஸ்எஃப்-ஜீ வரிசையில் ‘டஃப்’ பிரத்யேக வரிசையில் உலகின் மிக வேகமான ரீட் அண்ட் ரைட் வேகங்கள் அல்ட்ரா உறுதியுடன் 180என் வரையிலான பெண்ட் ப்ரூஃப் மற்றும் 5 மீட்டர் வரையிலான ட்ராப் ப்ரூஃபுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. துல்லியமான நிழற்படத்தை எதிர்பார்க்கும் ஃபோடோகிராஃபர்களுக்கு எஸ்எஃப்-ஜி வரிசை ‘டஃப்’ எஸ்டி கார்ட்கள் ஐபிஎக்ஸ்8 ரேட்டிங்க் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் ஐபி6எக்ஸ் ரேட்டுங்குடன் வருகிறது.
உலகின் முதல் ஒன்-பீஸ் மோல்டிங்க் கட்டமைப்புடன் உலகின் உறுதியான எஸ்டி அட்டை 18x பெண்ட் ப்ரூஃப் மற்றும் ட்ராப் ப்ரூஃப்
புதிய எஸ்எஃப்-ஜி வரிசை டஃப் எஸ்டி கார்ட் உலகின் முதல் மோனோலிதிக் கட்டமைப்பு (ஓன் பீஸ் மோல்டிங்க், நோ எம்ப்டி ஸ்பேஸ்) உயர் தர உறுதியான பொருள்களால் தயாரிப்பு ஆகிய சிறப்பம்சங்கள் காரணமாக மெல்லிய 3 அடுக்களால் வழக்கமான எஸ்டி ஸ்டாண்டர்டை விடவும் 18 மடங்கு உறுதியானது. வழக்கமான எஸ்டி கார்ட்டின் புரோக்கன் பிளாஸ்டிக் கேஸ், புரோக்கன் டேடா புரொடெக்ஷன் லாக் மற்றும் புரோக்கன் கனிக்டர் ரிப்ஸ் போலின்றி இது அதிக உறுதி கொண்டதாகும். எஸ்எஃப் –ஜி வரிசை டஃப் எளிதில் வளையாது, எளிதில் உடையாது. மிகச் சிறந்த உறுதியையும், கெட்டித் தன்மையையும் வழங்க சோனி பொறியியல் வல்லுனர்களால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடையும் தன்மையுள்ள பொருள்கள் இல்லாததை உறுதிப்படுத்த ரிப்-லெஸ் மற்றும் சுவிட்ச்-லெஸ் வடிவமைப்பு
மேம்பட்ட தொழில்நுட்பத் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய யுஹெச்எஸ்-II எஸ்டி அட்டை, ரைட் புரொடெக்ஷன் சுவிட்ச் இல்லாத உலகின் முதல் ரிப்-லெஸ் எஸ்டி ஆகும். முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முத்திரையிடப்பட்ட ஒன்-பீஸ் மோல்டெட் கட்டமைப்பு மற்றும் ரிப்-லெஸ், சுவிட்லெஸ் வடிவமைப்பு உருவப் படங்கள் சேதமடையாலும், வளையாமலும், கீழே விழுந்தால் உடையாமலும், தண்னீர் மற்றும் தூசு புகாமலும் பாதுகாக்கும்.
300எம்பி வரையிலான உலகின் மிக வேகமான ரீட் ஸ்பீட் & 299 எம்பி வரையிலான ரைட் ஸ்பீட்
மிகவும் வேகமாக மற்றும் கணிக்க இயலாத பொருள்களைப் படமெடுக்க புத்தம் புதிய எஸ்எஃப்-ஜி வரிசையில் 299 எம்பி வரை உலகத்தின் மிக வேகமான ரைட் ஸ்பீட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஃபர் க்ளியரிங்க் நேரம் குறைவதுடன், ஒரு வினாடிக்குள் அதிகபட்ச ஃப்ரேம்களை ஷூட் செய்யவும், தேவையான ஆக்ஷன்களையும் படமெடுக்கலாம். எஸ்எஃப்-ஜீ வரிசை ‘டஃப்’ ஸ்பெசிபிகேஷன் ரேஞ்ச் மிக உயரிய வீடியோ ஸ்பீடான வி90க்கும் ஆதரவளித்து ஹை ரெசொல்யூஷன் வீடியோக்கு உத்தரவாதம் அளிக்கும்.
மேலும் உயர் திறன் கொண்ட நிழற்படங்கள் மற்றும் காணொலி வீடியோ கோப்புகளை அனுப்புவது எஸ்எஃப்-ஜி சீரீஸ் ‘டஃப்’ ஸ்பெசிஃபிகேஷன் 300 எம்பி வேகம் காரணமாக எளிதாகும். உலகளாவிய் இந்த வேகம் ஷூட்டிங்க் முடிந்த பிறகு பணியோட்டத் திறனை மேம்படுத்தும். நிழற்படக் கலைஞர்களின் நடைமுறைத் தேவைகளை நிறைவு செய்ய எஸ்எஃப்-ஜி வரிசை ‘டஃப்’ ஸ்பெசிஃபிகேஷன் ரேஞ்ச் ப்ரைட் யெல்லோ பிராண்டிங்க் வடிவமைப்பு இருட்டான ஷூட்டிங்க் பகுதிகளிலும் கார்ட்டை எளித்தாக அடையாளம் காண உதவும்.
வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் முறையே ஐபிஎக்ஸ்8 & ஐபி6எக்ஸ் உலகத் தர மதிப்பீடு
துல்லியமாகப் படமெடுக்க எஸ்எஃப்-ஜி வரிசை ‘டஃப்’ ஸ்பெசிஃபிகேஷன் எஸ்டி அட்டை மிக உயரிய வாட்டர் ப்ரூஃப் (ஐபிஎக்ஸ்8) மற்றும் டஸ்ட் ப்ரூஃப் (ஐபி6எக்ஸ்) ரேட்டிங்க் முத்திரையுடன் வருகிறது.
எஸ்டி ஸ்கான் யுடிலிடி மற்றும் ஃபைல் ரெஸ்க்யூ மென்பொருள் மூலம் பணிக்கான பாதுகாப்பு
எஸ்எஃப்-ஜி வரிசை ‘டஃப்’ ஸ்பெசிஃபிகேஷன் எஸ்டி அட்டைகளிலுள்ள் சிறப்பு அம்சங்கள் நிழற்படக் கலைஞர்களுக்கு மன அமைதியைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ‘எஸ்டி ஸ்கான் யுடிலிடி’ மூலம் பயனீட்டாளர் கார்ட் நல்ல நிலையில் இருப்பதையும் சரி பார்த்துக் கொள்ள உதவுவதுடன், ஃபைல் ரெஸ்க்யூ மென்பொருள் தரவு மற்றும் நிழற்படங்கள் நீக்கப்பட்டாலும் அவற்றை மீட்டெடுக்க உதவும். மேலும் எஸ்எஃப்-ஜி வரிசைய ‘ட்ஃப்’ ஸ்பெசிஃபிகேஷன் எஸ்டி அட்டையில் எக்ஸ் ரே ப்ரூஃப், மேக்னெட் ப்ஃரூப், ஆண்டி–ஸ்டாடிக், டெம்பெரசர் ப்ரூஃப் மற்றும் ஃபீச்சர் யுவி கார்ட் உள்ளிட்ட அம்சங்களும் உண்டு.
விலை மற்றும் கிடைக்கும் தேதி
எஸ்டி கார்ட் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து சோனி மையங்கள், ஆல்ஃபா ஃப்ளாக்ஷிப் ஸ்டோர்ஸ் மற்றும் முன்னணி மின்னணு கடைகளில் கிடைக்கும்.
மாடல் | அதிகபட்ச விலை | கிடைக்கும் தேதி |
எஸ்எஃப்-ஜி64டி | ரூ. 13,290 | உடனடியாகக் கிடைக்கும் |
எஸ்எஃப்-ஜி128டி | ரூ. 24,590 | உடனடியாகக் கிடைக்கும் |