Monday , July 23 2018
Home / Tamilnadu Police / செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.

செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, து-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (26.06.2018) மதியம் சுமார் 1.00 மணியளவில் சுனாமி நகர், குடிசைமாற்று வாரிய அலுவலக பின்புறம் ரோந்து பணியாக காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். உடனே, காவல் குழுவினர் விரட்டிச் சென்று அதில் ஒரு வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், சந்தேகத்தின்பேரில் அவரை சோதனை செய்தபோது சுமார் 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், அவரை கைது செய்து செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சச்சூன், வ/20, த/பெ.அமல்தாஸ், எண்.403, 3வது குறுக்குத்தெரு, சுனாமி நகர், செம்மஞ்சேரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சச்சூன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

அயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.

சென்னை, நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் திருமதி.ரஞ்சிதா, வ/39 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மகள் ராதா, வ/5 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *