Wednesday , June 20 2018
Home / District-News / சென்னை மாநகராட்சியில் 589 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி வழங்கினார்கள்

சென்னை மாநகராட்சியில் 589 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி வழங்கினார்கள்

watch May 6, 2017 District-News, News Comments Off on சென்னை மாநகராட்சியில் 589 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவி வழங்கினார்கள் 253 Views

is it legal to order viagra from canada பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 115 பயனாளிகள், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 135 பயனாளிகள், தியாகராயநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 95 பயனாளிகள், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 138 பயனாளிகள், மைலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 106 பயனாளிகள் என மொத்தம் 589 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டிலான திருமண நிதியுதவியினையும், 2356 கிராம் தாலிக்குத் தங்கத்தினையும், மாண்புமிகு மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள், மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் மரு.வி.சரோஜா அவர்கள் தியாகராயநகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

enter தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஏழைப் பெண்களின் கல்வித் தகுதியை உயர்த்திடவும், ஏழைப் பெண்களின் இளம் வயது திருமணத்தை தவிர்ப்பதற்காகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000/- நிதியுதவி, 4 கிராம் தங்கம் மற்றும் பட்டம் / பட்டயம் வரை படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவி, 4 கிராம் தங்கம் 17.05.2011 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த 118 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.29.50 இலட்சம் நிதியுதவி மற்றும் 472 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த 471 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.2.35 கோடி மதிப்பிலான நிதியுதவி, 1884 கிராம் தங்கம் என மொத்தம் 589 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.2.65 கோடி மதிப்பிலான நிதியுதவியினையும், 2356 கிராம் தங்கத்தினையும் வழங்கினார்கள். பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அரசின் உத்தரவின்படி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி.எம்.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ஜெ.ஜெயவர்த்தன், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.சத்யநாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.விருகை வி.என்.ரவி, மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.நடராஜ், முன்னாள் அமைச்சர் திருமதி.பா.வளர்மதி, கூடுதல் பெருநகர மருத்துவ அலுவலர் மரு.மனோகரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

6 lakh trucks will not run in TN, Truck strike from June 18

Rising diesel price, third party premium and toll charges are a few important issues on …