Sunday , January 20 2019
Home / District-News / சென்னை மாநகராட்சியில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 3,368 கிராம் தாலிக்கு தங்கத்தினை வழங்கினார்கள்.

சென்னை மாநகராட்சியில் 421 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 3,368 கிராம் தாலிக்கு தங்கத்தினை வழங்கினார்கள்.

தமிழக அரசின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சியில்
421 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும்
3,368 கிராம் தாலிக்கு தங்கத்தினை மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்களும், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்களும் இராயபுரம் ஸ்ரீவெக்கா மஹாலில் வழங்கினார்கள்.
தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 200 பயனாளிகள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 89 பயனாளிகள், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட 132 பயனாளிகள் என மொத்தம் 421 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு வரை பயின்ற 189 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.47,25,000 மதிப்பிலான திருமண நிதியுதவியும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பயின்ற
232 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1,16,00,000 மதிப்பிலான நிதியுதவி என மொத்தம் 421 பயனாளிகளுக்கு ரூ.1,63,25,000 நிதியுதவியும், 8 கிராம் வீதம் 3,368 கிராம் தங்கமும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி.எம்.விஜயலட்சுமி, இ.ஆ.ப., வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஜி.வெங்கடேஷ் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.விஜயகுமார், பெருநகர மருத்துவ அலுவலர் மரு.மனோகரி, கூடுதல் பெருநகர மருத்துவ அலுவலர் மரு.அன்னப்பூர்ணா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN

Namma Chennai Festival 2019, will be organized with an objective to give an experience to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.