Wednesday , February 20 2019
Home / State-News / சென்னை ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை கண்டன ஆர்பாட்டம்

சென்னை ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை கண்டன ஆர்பாட்டம்

கோவையில் வாகன ஓட்டுநர்கள் கண்டன ஆர்பாட்டம்

கோவை : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டூரிஸ்ட் டாக்சி, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் அராஜகப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் சுற்றுலா ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் மூர்த்தி தலைமையில், எல்.பி.எப்.வேலுமணி கண்டன உரையில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ். இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றி கொண்டு, மற்றொருவரை அழைத்து செல்ல பாடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை தகாத வார்த்தைகள் திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பயணியின் அவமானப்படுத்தப்பட்டதால், கார் ஓட்டுநர் ராஜேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனில் இருந்த பதிவுகளின் அடிப்படையில், ராஜேஷின் தற்கொலைக்குக் காவல் ஆய்வாளர் தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேலும், ராஜேஷ் மரணம் போல் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்கக்கூடாது. இந்த கடந்த ஆண்டு மட்டும் 3 பேர் போலீசார் கெடுபிடியால் தற்கொலை செய்து உள்ளனர்.

எனவே, கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர், இது போல நடக்க கூடாதெனவும், இதனைக் கண்டித்தும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். அதன்படி, தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் டூரிஸ்ட் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் சங்கத்தைச் சார்ந்த சுப்புராஜ், மோகன், செயலாளர் சாமுவேல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கோஷசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும்  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.