Friday , June 21 2019
Home / District-News / சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் 6 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களையும் சேர்த்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்த திருமதி பவானி சுப்பராயன், திரு.ஜெகதீஷ் சந்திரா, திரு.சுவாமிநாதன், திரு.அப்துல் குத்தூஸ், திரு.தண்டபானி, திரு.ஆதிகேசவலு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் அண்மையில் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து, கடந்த வாரம் இவர்களை கூடுதல் நீதிபதிகாளக நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சக இணைச் செயலாளர் திரு.ராஜீந்தர் காஷியப் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, திருமதி பவானி சுப்பராயன், திரு.ஜெகதீஷ் சந்திரா, திரு.சுவாமிநாதன், திரு.அப்துல் குத்தூஸ், திரு.தண்டபானி, திரு.ஆதிகேசவலு ஆகியோர் இன்று கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

6 கூடுதல் நீதிபதிகளையும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 21 நீதிபதி இடங்கள் காலியாக உள்ளன.

 

About Admin

Check Also

GEC presented the “Asia Pacific Business Award” to 48 Entrepreneurs

The  Asia Pacific Business Awards Presented by GEC (Global Entrepreneur Council) and WLF (Women’s League …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.