Friday , October 19 2018
Home / District-News / சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது!

சென்னை அண்ணாசாலையில் திடீர் பள்ளம்: பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது!

IMG-20170409-WA0007

IMG-20170409-WA0004

IMG-20170409-WA0003
சென்னை, அண்ணாசதுக்கத்திலிருந்து வடபழனி செல்லும் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்றும் பள்ளத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தினை அடுத்து சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் அந்த பகுதிக்கு நேரில் சென்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ரோ ரெயில் பணியினால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் சாலை சீர் செய்யப்படும்.

அதன்பின் போக்குவரத்து மீண்டும் தொடங்கும். மீண்டும் விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இன்று மாலை 4.00 மணியளவில் பள்ளத்தில் சிக்கிய பேருந்து, கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது!

About Ragavendhar

Check Also

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் …