Monday , June 18 2018
Home / Tamilnadu Police / சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 1.அஜித்குமார், வ/21, த/பெ.கருணாகரன், எண்.19, டாக்டர் அம்பேத்கர் தெரு, ரசாக் கார்டன், அரும்பாக்கம் 2.வினோத், வ/21, த/பெ.ஐயப்பன், எண்.405, பீட்டர் ராஜா தெரு, அரும்பாக்கம் ஆகிய இருவர் மீது கே-3 அமைந்தகரை காவல் நிலையத்திலும் 3.ரவிந்தீரகுமார் சர்மா, வ/23, த/பெ.கோபால் சர்மா, எண்.25/3, பாலகிருஷ்ணமுதலி தெரு, வியாசர்பாடி என்பவர் மீது வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 3 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 3 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் அஜித்குமார், வினோத் ஆகிய இருவரும் கே-3 அமைந்தகரை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் ஆவர். மேலும் இவர்கள் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரவீந்திரகுமார் மீது பெண்ணை ஏமாற்றியதாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *