Sunday , December 16 2018
Home / Tamilnadu Police / சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 14 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 14 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 1.லஷ்மணன், வ/26, த/பெ.ரத்தினகுமார், எண்.10, ‘ஹ’ பிளாக். கைலாசம் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81, 2.லோகு (எ) லோகேஷ், வ/25, த/பெ. ஆனந்தன், எண்.26, கைலாசம் தெரு, தண்டையார்பேட்டை, 3.யுவராஜ், வ/23, த/பெ.ராமைய்யா, எண்.25, ‘நு’ பிளாக், சேனியம்மன் குடியிருப்பு, தண்டையார்பேட்டை, 4.ரவி (எ) ரவிச்சந்திரன் (எ) மாங்கா ரவி, வ/26, த/பெ.விநாயகமூர்த்தி, எண்.37, ‘ழு’ பிளாக், சேனியம்மன் குடியிருப்பு, தண்டையார்பேட்டை, 5.பிரபு (எ) பிரபாகரன், வ/25, த/பெ.குணசேகரன், எண்.8, ‘ழ’ பிளாக், சேனியம்மன் குடியிருப்பு, தண்டையார்பேட்டை, 6.பிரபு, வ/25, த/பெ.மதன்குமார், எண்.9, கைலாசம் தெரு, தண்டையார்பேட்டை, 7.ஹரிபாபு (எ) பாபு, வ/26, த/பெ.ராமு, எண்.27, ‘நு’ பிளாக், கைலாசம் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை ஆகிய 7 பேர் மீது ழ-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் 8.அந்தோணி டேவிட் ஜவஹர், வ/25, த/பெ.அந்தோணிமுத்து, சாட்லின் தெரு, காமராஜபுரம், அனகாபுத்தூர், சென்னை, 9.எழிலரசன், வ/32, த/பெ.வேணு, எண்.9, ராமநாதன் தெரு, காந்திநகர், நாகல்கேணி, சென்னை-44 ஆகிய 2 பேர் மீது ளு-6 சங்கர்நகர் காவல் நிலையத்திலும் 10.இந்துநாதன், வ/31, த/பெ.நாதன், எண்.49, கங்கையம்மன் கோயில் தெரு, விருகம்பாக்கம், சென்னை என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப்பிரிவிலும், 11.அப்பு (எ) நரேந்திரன், வ/30, த/பெ.அங்காரப்பன், எண்.41,ரயில்வே பார்டர் 2வது தெரு, காவேரி நகர், சைதாப்பேட்டை, சென்னை-14 என்பவர் மீது ழு-1, வேப்பேரி காவல் நிலையத்திலும், 12.வேலழகி, பெ/வ56, க/பெ.மணிவண்ணன், 9வது தெரு, கே.பி.பார்க், டிமளர்ஸ் ரோடு, புளியந்தோப்பு, 13.செம்மஞ்சேரி ஸ்ரீதர் (எ) ஆடு ஸ்ரீதர் (எ) ஸ்ரீதர், வ/30, த/பெ.ஞானசேகர், எண்.5533, 81வது குறுக்கு தெரு, செம்மஞ்சேரி, சென்னை ஆகிய 2 பேர் மீது ழு-7, சேத்துப்பட்டு காவல் நிலையத்திலும், 14.கர்ணன் (எ) கர்ணா, வ/23, த/பெ.சதாசிவம், எண்.22/03, பஜனை கோயில் தெரு, வடபழனி, சென்னை-26 என்பவர் மீது நு-5, பட்டிணப்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, ஒரு பெண் உட்பட 14 குற்றவாளிகளும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 14 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (22.12.2017) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 14 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் லஷ்மணன், லோகு (எ) லோகேஷ், யுவராஜ், ரவிச்சந்திரன், பிரபு (எ) பிரபாகரன், பிரபு மற்றும் ஹரிபாபு (எ) பாபு ஆகிய 7 பேர் மீது ஜீவா என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. அந்தோணி டேவிட் ஜவஹர் மற்றும் எழிலரசன் மீது பல செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. அப்பு (எ) நரேந்திரன்மீது கார் திருட்டு வழக்குகள் உள்ளது. வேலழகி என்ற பெண் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக 25 வழக்குகள் உள்ளது. செம்மஞ்சேரி ஸ்ரீதர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது. கர்ணன், (எ) கர்ணா மீது 5 வழிப்பறி வழக்குகள் உட்பட வீடு புகுந்து செல்போன் திருடிய வழக்குகள் உள்ளது.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.