Sunday , December 16 2018
Home / Tamilnadu Police / சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 1.பிரவீன்குமார், வ/28, த/பெ.தீனதாயளன், எண்.21, மக்காரம் கார்டன், கொளத்தூர் 2.தனசேகர், வ/38, த/பெ. பாலகிருஷ்ணன், எண்.12, எத்திராஜ் தெரு, கொளத்தூர் 3.அருண்குமார், வ/24, த/பெ. ரவி, எண்.29, முதல் தெரு, ராஜமங்கலம் ஆகிய மூவர் மீது வி-4 ராஜமங்கலம் காவல் நிலையத்திலும் 4.ராபின், வ/24, த/பெ.அருள், எண்.1832, 7 வது தெரு, டாக்டர்.அம்பேத்கார் நகர், ஆதம்பாக்கம் என்பவர் மீது எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்திலும் 5.சுரேஷ், வ/41, த/பெ.மகாதேவன், செந்தில் நகர், திருமுல்லைவாயல் என்பவர் மீது டி-10 திருமுல்லைவாயல் காவல் நிலையத்திலும் வில்லிவாக்கம் 6.அன்பு, வ/55, த/பெ.பெருமாள், எண்.42, பி- பிளாக், அப்பசாமி தெரு, ஹரிங்டன் சாலை,சேத்துப்பட்டு என்பவர் மீது உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 6 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (13.11.2017) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 6 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் பிரவீன்குமார், தனசேகர் ஆகிய இருவர் மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அருண்குமார் மீது வி-4 ராஜமங்கலம் காவல் நிலையத்தில் 8 செயின்பறிப்பு வழக்குகள் மற்றும் 1 வழிப்பறி வழக்கு உள்ளது. ராபின் மீது எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. சுரேஷ் மீது டி-10 திருமுல்லைவாயல், டி-3 கொரட்டூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.