Wednesday , February 20 2019
Home / Tamilnadu Police / சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 1.தாமஸ், வ/43, த/பெ.பிரகாசம், எண்.16, 2வது தளம், வசந்தம் அப்பார்ட்மென்ட், வங்ககு மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு 2.பவானி, வ/23, க/பெ. முருகன், எண்.24, 5 வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் 3.சத்யகலா, வ/33, க/பெ.கிருஷ்ணமூர்த்தி, எண்.9, 49 வது பிளாக், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் ஆகிய மூன்று நபர்கள் மீது கே-1 செம்பியம் காவல் நிலையத்திலும் 4.நாகராஜ், வ/28, த/பெ.பாளையம், எண்.25, 9 வது பிளாக், அன்சாரி 5வது தெரு, புளியந்தோப்பு என்பவர் மீது எஸ்-11 தாம்பரம் காவல் நிலையத்திலும் 5.சிவராஜ், வ/38, த/பெ.சின்னதம்பி, எண்.153, எழில் நகர், சுனாமி குடியிருப்பு செம்மஞ்சேரி என்பவர் மீது எஸ்-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்திலும் 6.சந்தோஷ், வ/25, த/பெ.ஜெகநாதன், எண்.50/1, மேற்குமாடவீதி, அயனாவரம் 7.சுப்பிரமணியராஜிவ் (எ) ராஜி, வ/24, த/பெ.தமிழ்வாணன், எண்.349, 5 வது தெரு, இரயில்வே குடியிருப்பு 8. மதன், வ/26, த/பெ.மோகன், எண்.19/34, ராஜா தெரு, வில்லிவாக்கம் ஆகிய மூவர் மீது கே-7 ஐ.சி.எப் காவல் நிலையத்திலும் 9. நித்யராஜ், வ/25, த/பெ.அன்பு, எண்.22, எல்-பிளாக், சின்னமலை, சைதாப்பேட்டை 10.விஷ்ணு, வ/27, த/பெ.பிரதிபாலன், எண்.84, சின்னமலை, சைதாப்பேட்டை 11.யுவராஜ், வ/30, த/பெ.அன்பு, எண்.17, கே-பிளாக், வெங்கடபுரம், சின்னமலை, சைதாப்பேட்டை 12.பரத் (எ) சோட்டா பரத், வ/36, த/பெ.பாலாஜி, எண்.ரூதர்புரம், மைலாப்பூர் ஆகிய மூவர் மீது ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 12 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 12 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 12 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் தாமஸ், பவானி, சத்யகலா ஆகிய மூவர் மீதும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ரம்யா என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளது. நாகராஜ் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் 4 வழிப்பறி வழக்குகள் உள்ளது. இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவராஜ் மீது எஸ்-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் 5 செயின்பறிப்பு வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது. சந்தோஷ், சுப்பிரமணிராஜீவ் (எ) ராஜி , மதன் ஆகிய மூவர் மீது கே-7 ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. நித்யராஜ், விஷ்ணு, யுவராஜ், பரத் (எ) சோட்டா பரத் ஆகிய நான்கு நபர்கள் மீது ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

About Admin

Check Also

போக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சாலை பாதுகாப்பு மற்றும் பொங்கல் விழா சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது  இதில் பொதுமக்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.