Wednesday , February 21 2018
Home / Launch / சென்னையில் ஊபர் அறிமுகப்படுத்தும் ஊபர் பள்ளிகள்

சென்னையில் ஊபர் அறிமுகப்படுத்தும் ஊபர் பள்ளிகள்

உலகின் மிகப் பெரிய தேவைக்கான பகிர் சவாரி நிறுவனமான ஊபர் சமீபத்தில் ஊபர் பள்ளிகளைச் சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த முனைவு மூலம், தமிழகம் முழுவதுமுள்ள 100 ஓட்டுனர் கூட்டாளிகளின் குழந்தைகளுக்குக் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்கப்படும். மழலையர் வகுப்பு தொடங்கி பொறியியல் வரை இந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகையை நிறுவனமே வழங்கும்.

இது குறித்து ஊபர் சென்னை பொது மேலாளர் அர்ஜுன் ஸ்ரீநிவாசன் கூறுகையில் ‘எங்கள் ஓட்டுனர் கூட்டாளிகளுடன் முழுமையாக எங்களை ஈடுபடுத்திக் கொள்வதே நோக்கமாகும். அவர்களுடைய குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஊபர் கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் மூலம் தகுதியுள்ள ஓட்டுனர் கூட்டாளிகளுக்குத் தலா ரூ 15,000/- வழங்கப்படும். இதன் மூலம் பல குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்குவதில் பெருமை அடைகிறோம்’ என்றார்.

ஊபர் கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் மூலம் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பயன் பெற உள்ளனர். சென்னையிலுள்ள மதராஸ் கிருத்தவக் கல்லூரி, சென்னையிலுள்ள ஸ்ரீ இராமனுஜர் பொறியியல் கல்லூரி, சோளிங்கரிலுள்ள வேலம்மாள் நியூ ஜென் பார்க் பள்ளி, சேத்துப்பாட்டிலுள்ள மதராஸ் சேவாசதன் மேனிலைப் பள்ளி, கோட்டைப்பட்டிணத்திலுள்ள டாக்டர் அப்துல் கலாம் மழலையர் & தொடக்கப் பள்ளி, அரக்கோணத்திலுள்ள டாக்டர் விஜிஎன் ஆண்களுக்கான மேனிலைப் பள்ளி ஆகியவை உதாரணத்திற்குச் சில.

ஓட்டுனர் கூட்டாளியின் வணிகத்தில் மட்டுமின்றி அவர்கள் குடும்பம் உள்பட, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இணைந்திருக்க ஊபர் உறுதியாக உள்ளது. இலவச விபத்துக் காப்பீடு தொடங்கி, கண் பரிசோதனை வரை, ஊபர் அவர்களது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும் எல்லா முனைவுகளையும் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

About Admin

Check Also

Minister Pandiarajan Launches CADD Centre’s Courseware in Tamil

Mr. K. Pandiarajan, Minister for Tamil Official Language and Tamil Culture, Government of Tamil Nadu, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *