Friday , December 15 2017
Home / Tamilnadu Police / செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

அதன்பேரில், எம்-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (27.11.2017) செங்குன்றம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திலகர் தெரு, எண்.1234 என்ற முகவரியில் உள்ள மானசா கட்டிடத்தில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்படி மானசா கட்டிடத்தின் காவலாளி 1.ஜோசப் வ/40, த/பெ.பாலு, எண்.1623, பாலகணேஷ் நகர், செங்குன்றம் உட்பட மொத்தம் 12 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.3 ஆயிரம் மற்றும் 4 சீட்டு கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *