Monday , December 17 2018
Home / Uncategorized / செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆய்வாளர்கள் விளக்கம்

செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆய்வாளர்கள் விளக்கம்

வேதியல் பொருட்களை சுற்றுச்சூழலை பாதிக்காமல் எவ்வாறு சிக்கனமாக
பயன்படுத்தவேண்டும்: செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற
கருத்தரங்கத்தில் ஆய்வாளர்கள் விளக்கம்

செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரியில் நேற்று
ஒருநாள் வேதியல் பொருட்களை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது, வேதியல்
பொருட்களின் விலை உயர்வு காரணமாக இயற்கை வேதியல் பொருட்களை கொண்டு
எவ்வாறு பயண்பாட்டை மேற்கொள்வது, என்பன பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் வென்னிலா, தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்
வேதியல் துறைத்தலைவர் ஜெபகுமார் வரவேற்புரை வழங்கினார்.

வேதியல் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுபுற சூழலை பாதிக்காமலும்,
வேதியல் பொருட்களை சிக்கனமாக பயண்படுத்தி செலவினங்களை குறைத்து முழுமையான
வேதியல் ஆய்வுகளை நிறைவான முறையில் மேற்கொள்ளவும், புதிய வேதியல்
மாற்றங்கள் குறித்தும் ஆசிரியர்களுக்கான கனிம செய்முறைகளை வேதியல்
பேராசிரியர்கள் செய்துகாட்டினர்,

இந்த கருத்தரங்கில், சென்னை ஆதார்ஸ் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்,
செய்யாறு, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி, உள்ளிட்ட ஏராளமான
அரசு மற்றும் தனியார் மகளிர் கல்லூரியிலிருந்து வேதியல் பேராசிரியர்கள்,
மற்றும் மாணவ மாணவிகள்  பங்குபெற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

படக்குறிப்பு:- செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர்
கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் வேதியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டபோது
எடுத்த படம்

About Admin

Check Also

UC Ads under Alibaba Group initiates a revolution of content marketing

Chennai, September, 2018: On September 28, Morden Chen, General Manager of Alibaba UC Ads, will reveal …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.