Tuesday , March 19 2019
Home / State-News / சில்லறை பிரச்னைக்காக பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்னைக்காக பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லறை பிரச்னைக்காக

#மாற்றுத்_திறனாளி பெண்ணை தனியார் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி #சர்மிளா_காந்தி. இவர், அரசு அலுவலகங்களில் ஸ்டேஷ்னரி பொருள்களை விற்று வருகிறார்.

இந்நிலையில், ஸ்டேஷ்னரி பொருள்களை வாங்க கோவை வந்த இவர், தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, சில்லறை பிரச்னை ஏற்பட்டு, சர்மிளா காந்தியை தகாத வார்த்தையில் திட்டி பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து ஷர்மிளா காந்தி, “ஸ்டேஷ்னரி பொருள்களை விற்று, என் தங்கையை கல்லூரியில் படிக்க வைத்து வருகிறேன்.

#டவுன்ஹாலில் இருந்து, டி.எஸ்.பி செல்வதற்காக 9A (TN 37 3999) என்ற தனியார் பேருந்தில் ஏறினேன். 6 ரூபாய் டிக்கெட்டுக்கு, 10 ரூபாய் கொடுத்தேன்.

அதற்கு, ‘1 ரூபாய் கொடுங்க… 5 ரூபாய் தருகிறேன்’ என்று நடத்துனர் கூறினார். என்னிடம் சில்லறை இல்லை என்றேன்.

அதற்கு, ‘உங்களுக்காக நான் எக்ஸ்ட்ரா காசு கொடுக்க முடியுமா?. டிக்கெட் பின்னாடி எழுதித் தருகிறேன்’ என்றார்.ஆறு ரூபாய் டிக்கெட்டுக்கு… நூறு ரூபாய் கொடுத்தால் தான் தப்பு.. நான் 10 ரூபாய் தானே கொடுத்தேன். பஸ்ல வருகிற எல்லோரும் கரெக்டா சில்லறை எடுத்துட்டு வர முடியுமா என்று நான் கேட்டதற்கு, ‘பொம்பளை பிள்ளைக்கு இவ்ளோ திமிரு ஆகாது’ என்று தகாத வார்த்தையில் கூறி, நான் இறங்கும் இடத்துக்கு ஒரு ஸ்டாப் முன்னரே என்னை இறக்கி விட்டுவிட்டனர்.

மோட்டார் வாகன சட்டப்படி, பேருந்து டிக்கெட் எடுக்காவிடின் 500 ரூபாய் அபராதம் விதிப்பது போல, மீதி சில்லறை தராத பேருந்து நிர்வாகம் மற்றும் நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, மகளிர் தினத்தன்று ஓர் மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பார்க்காமல் தகாத வார்த்தையில் பேசி பாதியில் இறக்கிவிட்ட நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார் கண்ணீருடன்…..

About Admin

Check Also

வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா

கோவை வி.சி.எஸ்.எம். மெட்ரிக் பள்ளியின் 18 வது ஆண்டுவிழா கிரீன் பீல்டு வளாகத்தில், பள்ளியின் தாளாளர் சுகுணா செயலாளர் ஹெரால்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.