Wednesday , June 20 2018
Home / National-News / சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் அதிகரிப்பு!

சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் அதிகரிப்பு!


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்களால் பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த வாகனங்களில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவதுடன், உரிய பிற விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில போக்குவரத்து துறையிடம் நிபுணர் கமல் சோய் வலியுறுத்தியுள்ளார்.
Dr. Kamal Soi, Member, National Road Safety Council, Ministry of Road Transport & Highways Government of India, New Delhi (1)
சாலை விபத்துக்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கில், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, இன்று (18-03-2017) தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், முனைவர் கமல் சோய்.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் – தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும், சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணருமான முனைவர் கமல் சோய் இது குறித்து கூறுகையில், “பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். நம்முடைய மற்றும் மற்றவர்களின் உயிரை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டு வாகனங்களை ஓட்டினால் சாலை விபத்துக்கள் அதிக அளவில் குறையும். வாகனங்களில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பலியாவோர் எண்ணிக்கையும் இங்குதான் அதிகமாக உள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, கடந்த 2015-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 69 ஆயிரத்து 59 (69,059) சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 79 ஆயிரத்து 746 பேர் (79,746) காயம் அடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 642 பேர் (15,642) பலியாகினர். இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் முறையே 67 ஆயிரத்து 250 (67,250), 77 ஆயிரத்து 725 (77,725) மற்றும் 15 ஆயிரத்து 190 (15,190) ஆக இருந்தது” என்று தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் வர்த்தக வாகனங்கள் அதிக வேகமாக செல்லுவதுதான் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம். 40 முதல் 50 சதவீதத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்களில் மரணம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பல்வேறு வகையான போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும் என 15.04.2015-ஆம் தேதியிட்ட அறிக்கை எண் 290(இ) வாயிலாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முனைவர் கமல் சோய் இது குறித்து மேலும் கூறுகையில், “சாலை பாதுகாப்பை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும் வகையில், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் 2006-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். அங்கீகாரம் இல்லாத தயாரிப்பாளர்களின் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களை பொருத்துவது வெளிப்படையாக அதிகரித்து வருகிறது. சரியான முறையில் சட்டங்களை அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம். இதனை உடனடியாக செயல்படுத்தினால் சாலை விபத்துக்களையும், பலியாவோர் எண்ணிக்கையையும் கணிசமான அளவில் குறைக்க முடியும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன்.

வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என்ற மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் மற்றும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, கருவிகள் முறையாக பொருத்தப்படுகின்றனவா என்பதை மாநில போக்குவரத்து துறை கடுமையான முறையில் கண்காணிக்க வேண்டும்.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், அதன் 16-06-2016 தேதியிட்ட கடிதம் வாயிலாக வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் முறையாக பொருத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனை முறையாக செயல்படுத்தும் வகையில் மாநில அரசுகள், கட்டுப்பாட்டு சாதனங்களுக்கான தகுதி கூறுகளை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் மாநில அரசுகள் வாகன உரிமையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இது தொடர்பான மறு சோதனை செய்த அறிக்கைகளை பெறுதல், மேற்பார்வை இடுதல் போன்ற தணிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சில சட்டவிரோதமான, அங்கீகாரம் பெறாத தயாரிப்பாளர்கள், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக குறைபாடுகள் உள்ள வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் எக்கோ கேஸ் இம்பெக்ஸ் (Eco Gas Impex Pvt. Ltd.), கிறாய்சால் டெக்னாலஜிஸ் இந்தியா (Craysol Technologies India Pvt. Ltd.), ஹோவல் ஸ்கேல்ஸ் அண்ட் சிஸ்டம் (Hovel Scales & System), மைக்ரோ ஆட்டோடெக் (Micro Autotech), டிஜிலா டிவைசஸ் இந்தியா (Digila Devices India Pvt. Ltd.) போன்ற நிறுவனங்கள் மீது தரமற்ற கருவிகளை விநியோகம் செய்வதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

முனைவர் கமல் சோய் பற்றி:

முனைவர் கமல் சோய் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பை முக்கிய பாடமாகக் கொண்ட போக்குவரத்து நிர்வாக இயல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய போக்குவரத்து சேவைத் துறையில், விபத்து தடுப்பு பிரிவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு படிப்புகளில் கூடுதல் தகுதிகளையும் பெற்றுள்ளார். இவரது சிறந்த சேவைக்காக, நெதர்லாந்தின் டெல்ஃப்ட் பல்கலைக்கழகம் (Delft University) ‘ராயல் சர்டிஃபிகேட்’ (Royal Certificate) எனப்படும் பெருமைமிகு சான்றிதழை வழங்கியுள்ளது. உலக அளவில் நவீன போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு அறிஞராக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் இவர் இடம் பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் உலக வங்கி திட்டத்துக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

About Ragavendhar

Check Also

Korn Ferry Global Gender Pay Index Analyzes Reasons Behind Inequalities in Male and Female Pay

MUMBAI / CHENNAI, April ,2018– An in-depth global analysis by Korn Ferry (NYSE: KFY), finds …