Thursday , November 22 2018
Home / Tamilnadu Police / சாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.

சாத்தங்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது.

சென்னை, திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 3வது தெரு, எண்.2/5 என்ற முகவரியில் கோபாலகிருஷ்ணன், வ/28, த/பெ.லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கோபாலகிருஷ்ணன் கடந்த 19.08.2018 அன்று மதியம் 01.00 மணியளவில் சாத்தங்காடு, கிளாஸ் பேக்டரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் மேற்படி கோபாலகிருஷ்ணைனை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து கோபாலகிருஷ்ணன் எம்-8 சாத்தங்காடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
எம்-8 சாத்தங்காடு காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குள்ளவாத்து (எ) ரவீந்திரன், வ/37, த/பெ.பாளையம், 2 வது தெரு, நேதாஜிநகர் குடிசைப்பகுதி, திருவொற்றியூர் என்பவரை நேற்று (20.08.2018) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட குள்ளவாத்து (எ) ரவீந்திரன் மீது எச்-8 திருவொற்றியூர் மற்றும் எம்-8 சாத்தங்காடு காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குள்ளவாத்து (எ) ரவீந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.

சென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வசிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.