Saturday , December 15 2018
Home / சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 72 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்றுநர்களுக்கு 4 கோடி ரூபாய்க்கான காசோலை – முதலமைச்சர் வழங்கினார்.

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 72 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்றுநர்களுக்கு 4 கோடி ரூபாய்க்கான காசோலை – முதலமைச்சர் வழங்கினார்.

cmawardsforathilates26052017-bigமுதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்றுநர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள், 2010-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக விளையாட்டு வீரர்களின் பயிற்றுனர்கள் என மொத்தம் 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்றுனர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, துறை சார்ந்த அமைச்சர், தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பரிசுத் தொகைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்றுனர்கள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

About Ragavendhar

Check Also

Glamorous & Talented SAKSHI AGARWAL Launched The New Branch of Glam Studios

The Fastest Growing Salon Chain ‘Glam Studios’ Launched their 1st store in the  AMBATTUR, CHENNAI.  …