Monday , June 26 2017
Home / Occasions-The-Week / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா இன்று தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா இன்று தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்களில் முக்கியமானது பஞ்சப்பிரகார விழா. அக்னி நட்சத்திரத்தில் உஷ்ணகிராந்தியை தணிப்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்விழா இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடாகி இரவு வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

14-ந் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 15-ந் தேதி பஞ்சபிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று கோவிலிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் பரிவாரங்கள் புடை சூழ மேளதாளத்துடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

16-ந் தேதி மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 17-ந் தேதி முத்து பல்லக்கு நடைபெறுகிறது. 18 மற்றும் 19-ந் தேதிகளில் தங்ககமல வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 20-ந் தேதி இரவு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

About Ragavendhar

Check Also

தனி தனியே 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். …