Friday , June 22 2018
Home / Tamilnadu Police / சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த ‘பார்’ ஊழியர் கைது.

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த ‘பார்’ ஊழியர் கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அவர்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, எஸ்-10, பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.9.2017) காலை 09.00 மணியளவில் பள்ளிக்கரணை பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வேங்கைவாசல், நாராயண செட்டிகுளம் டாஸ்மாக் கடை அருகில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜ்குமார், வ/34, த/பெ.ரகுபதி, அண்ணா தெரு, கருங்காட்டு போஸ்ட், தேவகோட்டை தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருவது தெரியவருகிறது. அவரிடமிருந்து 180 மி.லி. அளவுள்ள 123 மது பாட்டில்கள் மற்றும் ரூ.17,270/- பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *