Sunday , December 16 2018
Home / Tamilnadu Police / சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.

சங்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்த பொறியியல் மாணவர் கைது.

சென்னை, ரங்கா நகர் 4வது தெரு, எண்.65 என்ற முகவரியில் வசிக்கும் சுந்தரம், வ/55, த/பெ.பாண்டுரங்கன் என்பவர் பி.எஸ்.என்.எல் டெலிபோன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுந்தரம், இன்று (09.08.2018) காலை சுமார் 8.00 மணியளவில் திருநீர்மலை மெயின்ரோடு, சுப்புராயன் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் மேற்படி சுந்தரத்திடம் தாம்பரத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என வழிகேட்பது போல நடித்து அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். சுந்தரம் கூச்சலிடவே, அருகிலிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற வாலிபர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் தப்பிவிட்டார். தகவலறிந்த எஸ்-6 சங்கர் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிப்பட்ட நபர் இர்பான், வ/21, த/பெ.மகபூப் பாஷா, எண்.58, ஆஞ்சநேயர் கோயில் தெரு, பல்லாவரம் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மேற்படி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இர்பான் தனியார் பொறியியல் கல்லூரியில் இராண்டாமாண்டு படித்து வருவது தெரியவந்தது. தப்பியோடிய நூர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

About Admin

Check Also

CCT டிவி கேமரா குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.

துணை ஆணையாளரின் உத்தரவின் படி. இன்று 22.10.18 காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியின் தலைமையிலான போலிஸ் குழு, G5 கிழ்பாக்கம் அதிகாரிகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.