Monday , September 24 2018
Home / District-News / சகோதரி நிவேதிதை 150 ரத யாத்திரை துவக்க விழா.

சகோதரி நிவேதிதை 150 ரத யாத்திரை துவக்க விழா.

இந்நிகழ்ச்சியில், உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம் தலைவர் யதீச்வரி ராமகிருஷ்ணா ப்ரியாம்பா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். சிறப்பு பேச்சாளராக நடிகர் விவேக் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில், “பெண்ணே நீ மகத்தானவள்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சகோதரி நிவேதிதையின் திரு உருவ சிலைக்கு மரியாதை செய்யபட்டு, ரத யாத்திரை தொடங்கப்பட்டது .
சகோதரி நிவேதிதையின் 150 -வது பிறந்த ஆண்டினை கொண்டாடும் விதமாக 30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவை கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளையும் அவரது பெருமைகளையும் கொண்டு சேர்க்கும் மாபெரும் ரத யாத்திரையானது தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

About Admin

Check Also

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பயிலரங்கம், கமல்ஹாசன் பங்கேற்பு

  கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கோவை சுங்க கார்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.