Sunday , August 20 2017
Home / News / கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து துறை சார்பில் பெண்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி முகாம்

கோவை 13 தமிழகத்தில் முதன் முறையாக கோவை மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் இணைந்து குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் மகளிருக்கான இருசக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முகாம் ஒன்று துவக்கப் பட்டது.

கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 100 பேர் கலந்து கொண்டனர். 30பேருக்கு பழகுனர் உரிமம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் A.அமல்ராஜ் IPS, காவல் துணை ஆணைய‌ர் S. லட்சுமி IPS வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதயகுமார், குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு பழகுநர் உரிமங்களை வழங்கினர்.
காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேசுகையில், ‘தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் நடக்கும் விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கையை விட இது அதிகமாக உள்ளது. எனவே, அனைவரும் சாலை விதிகளை கடைபிடித்து சரியான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அல்லாது, பாதசாரிகளுக்கும் விதிமுறைகள் உள்ளது. அனைத்து தரப்பினரும் சாலை விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துக்களை குறைக்க முடியும்’ என்றார்.

About Ragavendhar

Check Also

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் ஜூலை 8 அன்று துவக்கம்

தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய …