Saturday , April 20 2019
Home / State-News / கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கல்லூரி 1969-1974 வரை படித்த மாணவர்கள் சொந்தமாக தொழில் செய்து கொண்டும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகள் ஆன நிலையில் பொன் விழா சந்திப்பாக கொண்டாட முடிவெடுத்தனர்.

அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, செளதி அரேபியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உட்பட 54 பேர் குடும்பத்துடன் கல்லூரி வாளகத்தில் திரண்டனர்.

இச்சந்திப்பில் முக்கிய நிகழ்வு தாங்கள் படிக்கும் போது போதித்த ஆசிரியர்களை கெளரவப்படுத்துதல் ஆகும். 18 ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் 85 வயதைக்கடந்தவர்கள் ஆவர் . சில ஆசிரியர்கள் தாமாக நடக்க முடியாத முதுமையில் இருந்த போதும் முன்னாள் மாணவர்களை சந்திக்க வேண்டும் என்ற அவாவில் உடல் நலம் குன்றிய நிலையிலும் வந்து கலந்துகொண்டது.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாணவர்களும் ஆசிரியர்களும் சந்தித்து கொண்ட பாங்கு மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது.

அதற்கு முன்னதாக தாங்கள படித்த காலத்தில் எந்த அறையில் தங்கிப்படித்தார்களோ அங்கு சென்று பார்வையிட்டனர்.

உணவருந்திய விடுதியில் மதிய உணவை எடுத்துக் கொண்டனர். வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூடங்களையும் பார்வையிட்டனர்.

வருடங்கள் 50 ஆண்டு கடந்தாலும் 1969-ம் வருடத்தில் சஞ்சரிப்பதாக அவர்களுக்கு உணர்ந்தனர்.
தற்போதைய முதல்வர் ருத்ர மூர்த்தி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் ஒவ்வொரு வரையும் தனித்தனியே அடையாளம் காணப்பட்டனர்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் தனித்தனியே கெளரவித்து, அவர்களிடம் படித்த மாணவர்கள் வாயிலாகவே நினைவுப் பரிசு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி முடிந்து கலைந்து செல்லும்போது ஒருபுறம் மகிழ்ச்சி நிறைந்திருந்தாலும் ஒருபுறம் தாக்கத்தை உண்டு பண்ணியது மீண்டும் இது போன்ற ஒருவாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பிரிந்து சென்றனர்.

இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆலாலசுந்தரம் செய்திருந்தனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia [email protected]

About Admin

Check Also

ராயல்கேர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…

ராயல்கேர் மருத்துவமனையில் உடனுக்குடன் தகவல் பயிமாற்ற வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்… கோவை, நீலம்பூரில் உள்ள ராயல்கேர் சூப்பர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.