Thursday , December 14 2017
Home / Tamilnadu Police / கே-11 சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.

கே-11 சி.எம்.பி.டி காவல் நிலைய எல்லையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.

சென்னை, கோயம்பேடு, தெற்குமாடவீதி, எண்.13/37 என்ற முகவரியில் சசிகுமார், வ/27, த/பெ.கருப்பையா என்பவர் தனது மாமா பழனிச்சாமி என்பவருடன் வசித்து வந்தார். மேற்படி இருவரும் சேர்ந்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். கடந்த 13.11.2017 அன்று இரவு சசிகுமார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சசிகுமாரிடம் தகராறு செய்து அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது தொடர்பாக சசிகுமாரின் மாமா பழனிச்சாமி கே-11 சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

கே-11 சி.எம்.பி.டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட டேவிட் வ/21, த/பெ.சுந்தரம், சி.கே.சுந்தரம் தெரு, அயன்புரம் என்பவரை கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியிருந்த மற்றொரு குற்றவாளியான சிவபெருமாள், வ/22, த/பெ.பரமசிவம், எண்.17, தெற்கு தெரு, சட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம் என்பவரை இன்று (15.11.2017) தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் வைத்து கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் கொலையுண்ட சசிகுமார் மற்றும் அவரது மாமா பழனிச்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூ விற்பனை செய்து வரும் சங்கீதா மற்றும் அவரது தங்கை சரண்யா ஆகிய இருவருக்கும் அடிக்கடி வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர். சரண்யா என்பவர் தனது கணவர் சிவபெருமாளை பிரிந்து கோயம்பேடு மெட்டுகுளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண்யாவுக்கும், பழனிச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிச்சாமி, சரண்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சரண்யாவின் கணவர் சிவபெருமாளுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபெருமாள் இது குறித்து தனது உறவினர் (சகளை) டேவிட்டிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து பழனிச்சாமியை கொலை செய்ய திட்டம் போட்டு பழனிச்சாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பழனிச்சாமி இல்லாததால், உறங்கிக்கொண்டிருந்த அவரது மைத்துனர் சசிகுமாரை எழுப்பி தகராறு செய்துள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த டேவிட் மற்றும் சிவபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கிருந்த கயிற்றால் சசிகுமாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தப்பியது விசாரணையில் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் இன்று (15.11.2017) ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

About Admin

Check Also

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *