Saturday , February 24 2018
Home / Tamilnadu Police / கே.கே.நகர் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது.

கே.கே.நகர் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது.

கே.கே.நகர் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த 3 நபர்கள் கைது. 15 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள்பறிமுதல்
சென்னை, துரைப்பாக்கம், பாரதி நகர், பகுதியில் பவன்ரெட்டி, வ/18, த/பெ.சத்தியசாரதி ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 29.01.2018 அன்று கே.கே.நகர், அண்ணா மெயின்ரோடு, இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் மேற்படி பவன்ரெட்டியிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இது தொடர்பாக பவன்ரெட்டி ஆர்-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.நாசர், வ/20, த/பெ.அன்சாரி, எண்.17, வன்னியர் தெரு, கோடம்பாக்கம் 2.பிரசன்னா, வ/20, த/பெ.கணேசன் (எ) ராஜ், எண்.208, திரு.வி.க.சாலை, கெருகம்பாக்கம் 3.எட்வின், வ/19, த/பெ.மார்டின், கங்கையம்மன் கோவில் தேரு, வடபழனி ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 செல்போன்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசாரின்விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் சேர்ந்து கே.கே.நகர் பகுதியில் நடந்து சென்ற நபர்களிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *