Tuesday , August 14 2018
Home / News / காளிகரம்பு – வத்தல்மலை மலைபாதையை உடனடியாக தார்சாலையாக மாற்றவேண்டும்விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காளிகரம்பு – வத்தல்மலை மலைபாதையை உடனடியாக தார்சாலையாக மாற்றவேண்டும்விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி ஏப், தமிழ் நாடு விவசாயிகள் சங்க தருமபுரி வட்ட 12வது வட்டமாநாடு தருமபுரி முத்துஇல்லத்தில் நடைபெற்றது.

ஒன்றிதலைவர் பி.பழணி தலைமைவகித்தார். ஒன்றியதுணைதலைவர் பச்சியப்பன் கொடியேற்றிவைத்தார்.ஒன்றியபொருளாளர் மணி வரவேற்றார்.

மாவட்டசெயலாளர் மல்லையன் துவக்கிவைத்துபேசினார்.ஒன்றியசெயலாளர் எம்.கணேசன் வேலைஅறிக்கை வாசித்தார். மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி ஆகியோர் வாழ்த்திபேசினர். மாவட்டதலைவர் எம்.ஆறுமுகம் நிறைவுறையாற்றினார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர் வட்டதலைவராக பச்சியப்பன் செயலாளராக எம்.கணேசன் பொருளாளராக மணி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

வறட்சியை முழுமையாக ஆய்வுசெய்து நிவாரணத்தொகை விவசாயிகளுக்கு வழங்கவும். கால்நடைகளுக்கு இலவச தீவனம் . தருமபுரி ஒன்றியத்தில் மக்களுக்கு குடிநீர், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், ஊரக வேலைதிட்டத்த்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள மக்களுக்கும் வேலைவழங்கவும். கூட்டுறவு பால்கொல்முதல் நிலையங்களில் பால்உற்பத்தியாளர்களுக்கு பால்பண பாக்கியை வழங்கவேண்டும் என வலியறுத்தப்பட்டது.

மேலும் கொண்டகர அள்ளிபஞ்சாயத்தில் உள்ள காளிகரம்பு – வத்தல்மலை
மலைபாதையை உடனடியாக தார்சாலையாக மாற்றவேண்டும். பொம்மிடியில் இருந்து ஆஞ்சநேயர் கோயில் வழியாக தருமபுரி செல்லும் தார்சாலை பழுதடைந்துள்ளது. இச்சாலையை செப்பனிடவேண்டும். வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தில் காற்று மாசுபடும் அளவில் கழிவுபொருட்கள் எரிப்பதை தடுக்கவேண்டும்.என தீர்மாணம்நிறைவேற்றப்மட்டது. மகாராஜன் நன்றி கூறினார்.

About Ragavendhar

Check Also

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. …