Saturday , November 18 2017
Home / Tamilnadu Police / கண்ணகிநகர், முத்தியால்பேட்டை மற்றும் அமைந்தகரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 4 நபர்கள் கைது. 171 மதுபாட்டில்கள் பறிமுதல்.

கண்ணகிநகர், முத்தியால்பேட்டை மற்றும் அமைந்தகரை பகுதிகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண் உட்பட 4 நபர்கள் கைது. 171 மதுபாட்டில்கள் பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜெ-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.10.2017) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு எண்.12562 என்ற முகவரியிலுள்ள வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு பெண் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சுகுணா, பெ/வ.36, க/பெ.தாமோதரன், எண்.12562, கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். மேற்படி வீட்டிலிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல என்-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.10.2017) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அம்மன் கோயில் தெரு மற்றும் பிரகாசம் சாலை சந்திப்பில் உள்ள மறைவான இடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சிலம்பரசன், வ/22, த/பெ.வெங்கடேசன், எண்.285, ‘பி’ பிளாக், கல்லறை தெரு, சென்டிரல், சென்னை-1 மற்றும் தேவேந்திரன், வ/23, த/பெ. ராமகிருஷ்ணன், எண்.26, காந்திபுரம், வியாசர்பாடி, சென்னை-39 ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கே-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.10.2017) ஆலப்பாக்கம், கணபதிநகர் பிரதான சாலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த காசி, வ/35, த/பெ. படிகாசு, எண்.1, சிவன் தெரு, கணபதி நகர், ஆலப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி பயிலும் 11 மாணவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *