Friday , December 15 2017
Home / Tamilnadu Police / ஓட்டேரி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் .

ஓட்டேரி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் .

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ப்பி-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (27.11.2017) மதியம் சுமார் 01.30 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஓட்டேரி தாசமக்கான், ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள மாருதி டீ ஸ்டால் அருகில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பாபு, வ/49, த/பெ.சுப்புராம், எண்.86, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, தாசமக்கான், ஓட்டேரி, சென்னை-12 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன்கள்-3, துண்டு காகித சீட்டுகள் மற்றும் நோட்டுப்புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பாபு விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *