Friday , December 15 2017
Home / Tamilnadu Police / ஐ.சி.எப் பகுதியில் ஆட்டோவை திருடிய சகோதரர்கள் இருவர் கைது ஆட்டோ பறிமுதல்.

ஐ.சி.எப் பகுதியில் ஆட்டோவை திருடிய சகோதரர்கள் இருவர் கைது ஆட்டோ பறிமுதல்.

சென்னை, ஐ.சி.எப், கக்கன்ஜி நகர், எண்.83 என்ற முகவரியில் ஆட்டோ ஓட்டுநர் சிட்டிபாபு, வ/38, த/பெ.சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 01.12.2017 அன்று இரவு கடந்த தனது ஆட்டோவை (கூசூ 05 ஹநு 3378) வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச்சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி ஆட்டோவை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிட்டிபாபு கே-7 ஐ.சி.எப் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கே-7 ஐ.சி.எப் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரம்பூர் இரயில் நிலையம் அருகே மேற்படி ஆட்டோ திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சையத்அலி, வ/35, த/பெ.இஸ்மாயில், எண்.3/5, சத்தியமூர்த்தி தெரு, சூளைமேடு மற்றும் அவரது தம்பி 2.பீர்முகமது,வ/24, த/பெ.இஸ்மாயில், எண்.3/5, சத்தியமூர்த்தி தெரு, சூளைமேடு ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

செங்குன்றம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. அவர்களிடமிருந்து ரூ.3000/- மற்றும் 4 சீட்டு கட்டுகள் பறிமுதல்.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *