Tuesday , June 19 2018
Home / Tamilnadu Police / எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அண்ணியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அண்ணியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை, நெசப்பாக்கம், பாரதிநகர், எம்.ஜி.ஆர் தெரு, எண்.6/11 என்ற முகவரியில் வெண்ணிலா, வ/38, க/பெ.பிரபு என்பவர் வசித்து வந்தார். வெண்ணிலாவின் கணவர் பிரபுவின் தம்பி ஜெயசீலன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு வேலூரிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். ஜெயசீலன் இங்கு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை வெண்ணிலா தனது கணவர் பிரபுவிடம் கூறியுள்ளார். பிரபு தனது தம்பி ஜெயசீலனிடம் ஏதாவது வேலைக்கு செல்லும்படியும், அல்லது வீட்டை விட்டு வெளியே போகும்படி கண்டித்துள்ளார். இதற்கு காரணம் தனது அண்ணிதான் என நினைத்து ஆத்திரமடைந்த ஜெயசீலன் கடந்த 06.12.2013 அன்று மதியம் 2.30 மணியளவில் வீட்டில் தனியாகயிருந்த தனது அண்ணியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டார். இது தொடர்பாக வெண்ணிலாவின் கணவர் பிரபு ஆர்-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஜெயசீலன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக, மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மூலம் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று (21.12.2017) தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அவர்கள், குற்றவாளி ஜெயசீலன், வ/37, த/பெ.ஜெயராஜ், மேல்புதுப்பாக்கம் கிராமம், வாழைப்பந்தல் வழி, ஆற்காடு தாலுக்கா, வேலூர் மாவட்டம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4,000/- அபராதமும் , அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, விரைவாக சாட்சிகளை ஆஜர் செய்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத்தந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *