Thursday , July 18 2019
Home / Tamilnadu Police / எண்ணூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது. 19 கிலோ மாவா மற்றும் 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்.

எண்ணூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது. 19 கிலோ மாவா மற்றும் 100 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, எம்-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.11.2017) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த கலா, வ/40, க/பெ.அரணி, எண்.4, 37 வது பிளாக், சுனாமி குடியிருப்பு எர்ணாவூர் என்ற பெண்மணியை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 கிலோ மாவா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (13.11.2017) கண்காணிப்பு பணியிலிருந்தபோது, கோயம்பேடு மார்கெட், 7 வது தெரு நுழைவு வாயில் அருகில் உள்ள டீக்கடையில் மாவா மற்றும் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த சுரேஷ், வ/32, த/பெ.சாமிக்கண்ணு, அண்ணா தெரு, சினமயா நகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.260 பறிமுதல் செய்யப்பட்டது.

 

About Admin

Check Also

போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சென்னை போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி ஜி3 கீழ்பாக்கம் போக்குவரத்து சாரகத்தில் பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.