Wednesday , September 26 2018
Home / Business / உயர்மின் அழுத்த நேரடி மின்சார இணைப்புக்கான ஒப்பந்தத்தை எச்விடிசி சைமன்ஸ் மற்றும் சுமிடோமோ எலக்ட்ரிக் பெற்றுள்ளது.

உயர்மின் அழுத்த நேரடி மின்சார இணைப்புக்கான ஒப்பந்தத்தை எச்விடிசி சைமன்ஸ் மற்றும் சுமிடோமோ எலக்ட்ரிக் பெற்றுள்ளது.

உயர்மின் அழுத்த மின்சாரத்தை, இந்தியாவின் மத்திய தொகுப்புக்கு நேரடியாக அளித்திட வகை செய்யும் ஒப்பந்தத்தை சைமன்ஸ் மற்றும் சுமிடோமோ எலக்ட்ரிக் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கூட்டு நிறுவனத்துக்கு இந்திய மின்தொடரமைப்புக் கழகம் வழங்கியிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த ஒப்பந்தப்புள்ளியின் விலை 520 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதில், சைமன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்பது சற்று ஏறக்குறைய ரூ.1,682 கோடியாகும்.Infographics 24 03 17-01

இந்த மின்தொடரமைப்பை அதிகரிக்கும் இந்த திட்டமானது நீண்டகால திட்டமாகும். இதன்மூலம், கேரள மாநிலத்துக்கு தடையில்லாத நம்பக்தன்மை வாய்ந்த மின்சாரம் கிடைக்கப்பெறும். மேலும், 24 மணிநேரமும் அனைவருக்கும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்ற இந்திய அரசின் தொலைநோக்கில் தன்னை பங்குதாரராக இந்தத் திட்டத்தின் மூலம் சைமன்ஸ் நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரம் கிடைப்பதும், அது பகிரப்படுவதும் மிகவும் முக்கியமாகும்.

இந்தத் திட்டத்துக்கான மிக முக்கியமான இயந்திரங்கள் அனைத்தும் இந்தியாவின் தொழிற்சாலைகளில் இருந்து தருவிக்கப்ப்டடு பயன்படுத்தப்பட உள்ளன.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரித்து அவற்றைப் பயன்படுத்துவோம் என்ற மைய அரசின் அரசின் கொள்கைக்கு சைமன்ஸ் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சுனில் மாத்தூர்.

இந்தத் திட்டமானது மொத்தம் 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் முதல் உயர்மின் அழுத்த மின்சார இணைப்பாகும். மேலும், அதனுடன் வோல்ட் சோர்ஸ்டு கன்வர்ட்டர் எனப்படும் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பமாகும். இதன்மூலம், நீடித்த மற்றும் சுயாட்சி பெற்ற மின்சார கட்டுப்பாட்டு வசதியையும் ஏற்படுத்தப்படும். மேலும், ஏ.சி., மின்சார அமைப்புகளிலும் அவற்றை பயன்படுத்தும் வகையில் கூடுதல் வசதிகளைக் கொண்டிருக்கிறது. இது எக்ஸ்.எல்.பி.இ., எனப்படும் கேபிள் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு மின்சார இணைப்புக்கான தீர்வினைத் தருகிறது.

சைமன்ஸ் நிறுவனமானது இரண்டு இணை மாற்றக்கூடிய நிலையங்களையும், இரண்டு இணை கன்வெர்டர்களையும் அமைக்கிறது. அவை ஆயிரம் மெகாவாட் மின்சாரத்துடன் விஎஸ்சி எச்விடிசி தொழில்நுடபதுடன் பயன்படுத்தப்படும். சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனமானது டி.சி., மின் இணைப்புக்கான எக்ஸ்.எல்.பி.இ., கேபிள்களுக்கு பொறுப்பாகச் செயல்படும். இந்த மின்தொடரப்பு ஆனது, நிர்ணயிக்கப்பட்ட காலமான 2020 முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

புகளூர்-திரிசூர் 320 கிலோவோல்ட் எச்விடிசி அமைப்பானது இந்தியாவின் தென் மாநிலமான தமிழகம் மற்றும் தென் மேற்கு இந்தியாவான கேரளத்தின் திரிசூரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படும். திரிசூர் கன்வெர்ட்டர் நிலையமானது தரைக்கு அடியில் எக்ஸ்.எல்.பி.இ., எச்விடிசி கேபிள்கள் மூலமாக இணைக்கப்படும். இந்த நிலையத்தை சைமன்ஸ் நிறுவனம் கட்டமைக்கும். சுமிடோமோ எலக்ட்ரிக்ஸ் டிசி-எக்ஸ்எல்பிஇ கேபிள்கள் ஆனது தனித்துவம் வாய்ந்தது. அவை சாதாரண நிலையில் 90 டிகிரி வெப்பநிலையில் கூட இயங்கும் நிலை உடையது. அதிக மின்சாரத்தை தாங்கிகக் கூடிய மேல்நிலை மின்சார லைன்களில் கூட இது பொருந்தும் வகையில் கலப்பினமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுமிடோமோ நிறுவனமானது 128 கிலோமீட்டர் நீளத்துக்கு எக்ஸ்எல்பிஇ எச்விடிசி கேபிள்களை தருகிறது. அதில், 32 கிலோமீட்டர் நீளத்துக்கு நான்கு கேபிள்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படடிருக்கிறது. புகளூரில் உள்ள கன்வெர்ட்டர் நிலையத்தில் கேபிள்கள் மேலே செல்லும் வகையில் இருக்கும். வடிவமைப்பு, பொறியியல், பொருத்துதல், செயல்படுத்துதல், எச்விடிசி நிலையத்துக்கான மிகமுக்கிய கருவிகளை அளித்தல், மின்மாற்றிகள், கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற பல பிரிவுகளில் சைமன்ஸ் நிறுவனம் செயல்பட உள்து. இதுமிக முக்கிய திட்டமாக நிறுவனத்துக்கு இருக்கும்.

சைமன்ஸ் லிமிடெட்: மின்மயமாக்கல், இயந்திரமாக்கல், டிஜிட்டல்மயமாக்குதல் போன்றவற்றை முக்கிய இலக்குகளாகக் கொண்டு சைமன்ஸ் செயல்படுகிறது. மின்சார உற்பத்திக்கான சைக்கிள் டர்பைன்கள், மின்பகிர்மானம் மற்றும் விநியோகத்துக்கான தீர்வுகள், ஸ்மார்ட் நகரங்களுக்கான உட்கட்டமைப்பு தீர்வுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், தொழிற்சாலைகளுக்கான இயந்திரமயமாக்கல், மென்பொருள் தீர்வுகள், சுகாதார பாதுகாப்பு தொடர்பான கருவிகள் என பல துறைகளில் சைமன்ஸ் நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 21 உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் விற்பனை மற்றும் சேவை மையங்கள் உள்ளன. சைமன்ஸ் ஏஜி இந்தியாவானது 75 சதவீத மூலதன முதலீடுகளைக் கொண்டிருக்கும் நிறுவனமாக விளங்குகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலப்படி சைமன்ஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு ரூ.108,089 மில்லியன் ஆகும். அதில், 9 ஆயிரத்து 580 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு www.siemens.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

சைமன்ஸ் ஏஜி: இதுஒரு சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமாகும். கடந்த 165 ஆண்டுகளுக்கும் மேலாக புதுமுக தொழில்நுட்பங்கள், பொறியியல் நிபுணத்துவம், தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றால் சிறந்து விளங்குகிறது. இது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மின்மயமாக்குவது, இயந்திரமயமாக்குவது மற்றும் டிஜிட்டல்மயமாக்குவது ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மின்சாரத்தை திறனுடன் பயன்படுத்துவது, வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் முன்னணி பெற்றுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கான தீர்வுகளைத் தரும் முன்னணி நிறுவனமாகவும், உட்கட்டமைப்புத் தீர்வுகள், இயந்திரமயமாக்குதல், மென்பொருள் தீர்வுகள் ஆகியவற்றையும் தருகிறது. மருத்துவத் துறையில் எம்.ஆர்.ஐ., இயந்திரக் கருவிகள், ஆய்வகங்களில் பயன்படுத்துவதற்கான கருவிகள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பருடன் முடிவடைந்த காலத்தில் சைமன்ஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு 79.6 பில்லியன் யூரோவாகவும், நிகர வருவாய் 5.6 பில்லியன் யூரோவாகவும் இருந்து. அதேகாலகட்டத்தில் சர்வதேச அளவில் ஊழியர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 51 ஆயிரமாக இருந்தது. மேலும் விவரங்களுக்கு www.siemens.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

சுமிடோமோ எலக்ட்ரிக் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்: இந்த நிறுவனம் கடந்த 1897 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதில் இருந்து எலக்ட்ரிக் வயர்கள், கேபிள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய வர்த்தகத்திலும், வணிக வாய்ப்புகளிலும் ஈடுபடும் வகையில் அசல் ஆய்வுகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் தொடங்கியுள்ளது. எனவே, அதனுடைய வணிகத்தை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றிக் கொண்டு புதிய தயாரிப்புகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் படைப்பதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. அதன்படி, ஆட்டோமோட்டிவ், தகவல் தொடர்பியல், எல்க்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி, தொழிற்சாலைகளுக்கான கருவிகள்-பொருள்கள் உற்பத்தியில் இறங்கியுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், உண்மையான வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு உலகம் முழுவதற்கும் உள்ள சமூகத்துக்கு தனது பங்கினை ஆற்றி வருகிறது. மேலும் விவரங்கள் http://global-sei.com/-இல் அறியலாம்.

About Ragavendhar

Check Also

Kotak Life Reimagines Advisor-Consumer Engagement; Launches ‘Smart Sell’

Mumbai,  September, 2018: Kotak Mahindra Life Insurance Company Limited (Kotak Life) today announced the launch of …