Monday , February 19 2018
Home / Business / உங்கள் வாழ்வில் வளம்பெற இந்த அக்ஷய திரிதியையை ஃபாரெவர் மார்க் வைரங்களுடன் வரவேற்றிடுங்கள்

உங்கள் வாழ்வில் வளம்பெற இந்த அக்ஷய திரிதியையை ஃபாரெவர் மார்க் வைரங்களுடன் வரவேற்றிடுங்கள்

2 Stones Comp V22 Stones Comp V2
இந்த மங்கள நிகழ்வான அக்ஷய திரிதியையில், ஜொலிக்கும் ஃபாரெவர் மார்க் டூகெதர் கலக்ஷனுடன் உங்கள் இல்லத்திற்கு வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவாருங்கள்.

அக்ஷய திரிதியை, எந்த ஒரு காரியத்தைப் புதிதாக தொடங்குவதற்கும் மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுகிறது. அத்தோடு வாழ்வில் வளத்தைப் பெருக்க, புது நகைகள் வாங்கியும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. “அக்ஷய” என்றால் “நித்ய” அதாவது என்றென்றும் மாறாதது என்று அர்த்தம். ஃபாரெவர் மார்க் வைரங்களும் என்றென்றும் மாறாத அழகுடைய, அரிதாக மற்றும் பொறுப்பாகத் தேர்ந்தெடுத்த வைரங்களை மட்டுமே கொண்டது.

ஃபாரெவர் மார்க்கின் டூகெதர் கலக்ஷன், இரண்டு ஜொலிக்கும் வைரங்களை, 18 காரட் மஞ்சள், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத் தங்கத்தில் பதித்து தருகிறது. ஒவ்வொரு ஃபாரெவர் மார்க் வைரத்திலும் தனித்துவமான குறியீடு அதன் பிராண்டை குறிக்கும் வகையில் பொறிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள வைரங்களில் 1% வைரம் மட்டுமே இத்தகைய குறியீட்டை பொறிக்க தகுதி பெற்றது. ஆதலால் இந்த வைரங்கள், அகஷய திரிதியைக்கு பரிசளிக்க மிகவும் பொருத்தமானதாகும். இந்த பிரத்யேக கலக்ஷன்களில் மோதிரம், பெண்டன்ட் மற்றும் காதணிகளும் அடக்கம்.

இந்த நிகழ்வில், ஃபாரெவர் மார்க்கின் தலைவர் திரு சச்சின் ஜெயின் பேசும்போது, “அக்ஷய திரிதியை விலையுயர்ந்த பொருட்கள் வாங்க ஏற்ற மங்கள நாள் ஆகும். இந்த நாளில் நிறைய வாடிக்கையாளர்கள் வைரங்களை வாங்க விரும்புவார்கள். ஃபாரெவர் மார்க் வைரமாகத் தேர்ந்தெடுக்கப்பட பல கட்ட கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இயற்கையாகவும், தூயதாகவும் இருக்கும் வைரங்களை விட வேறு சிறந்த வைரம் வேறு எங்கு இருக்கப் போகிறது?”, என்று கூறினார்.

இந்த பிரத்யேகக் கலக்ஷன்கள், நாடெங்கிலும் உள்ள ஃபாரெவர் மார்க் நகைக்கடைகளில் கிடைக்கும். கூடுதல் தகவல்களுக்கு, 1800 210 2121 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

About Ragavendhar

Check Also

Tamil Nadu’s latest General Entertainment channel COLORS Tamil donates Rs. 30 Lakhs to Nadigar Sangam

Chennai,  February, 2018: Tamil Nadu’s latest entrant in the general entertainment space, COLORS Tamil channel …