Saturday , February 23 2019
Home / News / ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.

ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பாரத பிரதமர் திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி மலையடிவாரப்பகுதியில் ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
IMG_2017-02-27_09-13-34
ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்குள்ள தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்த பிறகு சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். ஆதி யோகியின் சிலையை திறந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில்

எல்லா மனிதர்களின் இதயத்திலும் ஆன்மிகம் குடிகொ ண்டிருக்கிறது. மொழிகள் பல இருக்கலாம், ஆனால் ஆன் மிகம் ஒன்றுதான். சிவன்-பார்வதி ஒற்றுமை, இமயம் குமரி ஒற்றுமை. காசி முதல் கோவை வரை சிவபெரு மான் நம்மை இணைத்துள்ளார்.

இந்து மதக் கடவுள்கள் ஒவ்வொருவரும் ஒரு விலங்கைத் தங்களின் வாகனமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒன்றுக் கொன்று பகைமை கொண்ட அந்த விலங்கு களைத் தங்களின் வாகனங்களாகக் கொண்டதன் மூலம், முரண்பட்ட அனைத்தையும் ஒற்றுமையாக ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இந்து மதக் கடவுள்கள் உணர்த்தியிருக்கின்றனர்

“எத்தனையோ இந்து விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சிவராத்திரிதான் மகா சிவராத்திரி என அழைக்கப்படுகின்றது. எத்தனையோ தேவ கடவுள்கள் இருந்தாலும் சிவன் தான் மகாதேவன் என அழைக்கப்படுகிறார். சிவ மந்திரம் தான் மகா மந்திரம் என அழைக்கப்படுகின்றது

கடவுள் எந்த வடிவில் இருந்தாலு வழிபடுவது நம் பண்பாடு. மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். புதிய சிந்தனைகளை வரவேற்பது தான் நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுபித்துக் கொள்கிறோம். வேறுபாடுகளை கடந்து பக்தியால் ஒன்றுபட்டுள்ளோம். நமது கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.

ஒரு ஜீவனை சிவனாக்குவது யோகப் பயிற்சி. ஒரு ஜீவா த்மாவை பரமாத்வாக மாற்றுகிறது யோகா…. யோகா கலையை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தை காக்க யோகா முக்கியமானதாக இருக்கிறது. உணர்விலிருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கிரியா ஊக்கியாக யோகா விளங்குகிறது. யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒற்றுமையை உணர முடியும்

ஆதியோகி சிவன் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன். நல்லவற்றுக்கு போராடும் திறனை இறைவன் தருகிறான் என்று கூறினார்.

About Ragavendhar

Check Also

பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும்  …