Sunday , August 18 2019
Home / State-News / இளைய சமுதாயத்தை இயற்கைக்குத் திருப்பிய இயற்கை மருத்துவ கண்காட்சி

இளைய சமுதாயத்தை இயற்கைக்குத் திருப்பிய இயற்கை மருத்துவ கண்காட்சி

கோவை சௌரிபாளையத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மேல்நிலை பள்ளியும், கோவை சூலூர் ஆர்.வி.எஸ். ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இயற்கை மருத்துவக் கண்காட்சி இப்பள்ளி அரங்கில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை நடைபெற்று வருகிறது.

அன்னை வேளாங்கன்னி பள்ளி நிர்வாகத்தினர் கண்காட்சிக்காக 150 அரியவகை உயிர் மூலிகைச் செடிகளையும், கொடிய நோயையும் போக்கைக் கூடிய 50 அபூர்வ வகை வேர்கள், பட்டைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பூக்களையும் சேகரித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

பள்ளி முதல்வரின் மேற்பார்வையில், இப்பள்ளியின் 300 மாணவ-மாணவியருக்கு இயற்கை மூலிகைகளின் பெயர்கள், பயன்கள் போன்ற விவரங்கள் குறித்து நன்கு பயிற்சி அளித்தனர்.

மாணவ, மாணவியர் மூலிகைச் தாவரங்களான ரணகள்ளி, தான்றிக்காய், கடல் அழித்தல், வாத நாராயணன், ஜடாமஞ்சி, மகிழம்பூ,மற்றும் வேர், பட்டைகள், பழங்கள் ஆகியவற்றின் பெயர்களையும் இதன் பயன்களையும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார் மற்றும் மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன், தொடு சிகிச்சை நிபுணர் கிளாடிஸ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு மாநில உறுப்பினர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் இயற்கை மருத்துவம் குறித்து கலந்துரையாடினர்.

ஏராளமான பொதுமக்களும் மாணவ, மாணவியரும் கண்டு விழிப்புணர்வு பெறும் இந்த கண்காட்சிக்கு இப்பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ், பள்ளி முதல்வர் மெர்சி விக்டர் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பள்ளி முதல்வர் மெர்சி விக்டர் குறிப்பிடும் போது, “நமது முன்னோர்கள் மூலிகைகளையே உணவாக உட்கொண்டு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அந்த அரிய வகை இயற்கை மருந்துகளை மாணவ, மாணவியர்கள் அறிந்து பயன்படுத்தும் நோக்கிலும்,சிறு வயது முதலே மாணவ, மாணவியருக்கு இயற்கை உணவு முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் கண்காட்சியை துவக்கியுள்ளோம்.பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்,” என்றார்.

ஆர்.வி.எஸ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.கிருத்திகா அவர்கள், “உடம்பை வளர்ந்தேன் உயிர் வளர்ந்தேன் எனும் திருமூலர் வாக்கின்படி நாம் நம் உடம்பைக் காப்பதன் மூலம் தான் உயிரைக் காக்க முடியும். இன்றைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது போன்ற இயற்கை மூலிகைகள் கண்காட்சிகள் அவசியம்., “என குறிப்பிட்டார்.

அமோக வரவேற்ப்பைப் பெற்ற இந்த இயற்கை மருத்துவக் கண்காட்சி பொதுமக்கள் வேண்டுகோளுக்கேற்ப மார்ச் 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம், மவுன அஞ்சலி கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு தேசிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.