Thursday , February 22 2018
Home / News / இளம்பெண்ணை கொன்ற வழக்கில் கைதான கணவர் சிறையில் அடைப்பு

இளம்பெண்ணை கொன்ற வழக்கில் கைதான கணவர் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல்சூளை தொழிலாளி. இவருடைய மனைவி கில்டா ராணி என்ற ஷாலினி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

கில்டா ராணி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 14–ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த கில்டா ராணி கழுத்து, கைகளில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கில்டாராணியிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள் மற்றும் கணவர் ஆதித்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் கில்டாராணி மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், ஆதித்தனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

கில்டாராணியின் நடத்தை சரியில்லாததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இந்தநிலையில் கில்டாராணியை பார்க்க வீட்டுக்கு தினமும் பலர் வந்து செல்வதாக எனக்கு தெரியவந்தது. இதனால் பலருடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி அவளிடம் கூறினேன். ஆனால் தொடர்பை விட முடியாது என்று கூறினாள். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்தினேன். கைகளால் தடுத்ததால் கைகளிலும் குத்து விழுந்தது. மேலும் அவளை தலையணையால் அமுக்கி மூச்சை திணற வைத்து கொன்றேன் என்று ஆதித்தன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

இதன் பிறகு போலீசார் நேற்று முன்தினம் ஆதித்தனை கைது செய்தனர். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …