Friday , March 22 2019
Home / Business / இந்தியா பஜா 2017-இல் ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி களம் இறங்குகிறது.

இந்தியா பஜா 2017-இல் ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி களம் இறங்குகிறது.

புகழ்பெற்ற தாகர் 2017 ரேசிங்கை ஈர்ப்பாகக் கொண்டு ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி, இந்தியா பஜா 2017 என்ற தலைப்பின் கீழ் இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருக்கிறது. இந்த மிகப்பெரிய நிகழ்வில், இரண்டு சக்கர வாகனங்களின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோடோ கார்ப்-பின், மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி தன்னை களம் இறக்கவுள்ளது.
Picture2 (1)

MCH23087
கடந்த பிப்ரவரியில் ராஜஸ்தானில் மாருதி சுசூகி அணிவகுப்பைத் தொடர்ந்து, ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி தனது இரண்டாவது போட்டிக்கான களத்தில் இந்த ஆண்டு இறங்கவுள்ளது. இந்தியா பஜா 2017-இல் ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணியானது தனது சிறப்பான செயல்திறனை காட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. புகழ்பெற்ற தாகர் அணிவகுப்பில் குறிப்பிடத்தக்க தொடக்கத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்போர்ட்ஸ் அணி செய்துள்ளது.

இந்தியா பஜா 2017-இல் ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணியானது தனது புகழ்பெற்ற போர்ச்சுகீசிய வீரரான ஜோகுயும் ரோட்ரிகஸ் இந்திய மண்ணில் தனது திறனை வெளிக்காட்டவுள்ளார்.

ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி அணிவகுப்பில் இருந்த சி.எஸ்.சந்தோஷ் காயத்தில் இருந்து மீள்வதற்கு காலம் ஆகும் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் ராஜஸ்தானில் முடிவடைந்த மாருதி சுசூகி போட்டியில் பங்கேற்ற போது அவருக்கு முதுகுதண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவது கண்டு உண்மையிலேயே ஸ்போர்ட்ஸ் அணியானது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பாக அதிகளவு ஓய்வினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சந்தோஷ் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்தியா பஜா 2017-ஆனது ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தார் பாலைவனத்தில் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த இந்தியா பஜா 2017-ஆனது புகழ்பெற்ற தாகர் போட்டிகளின் ஒருபகுதியாக நடத்தப்படுகிறது. அதாவது, இந்தியா பஜா-வில் வெற்றி பெறக் கூடியவர் மொராக்கோவில் நடைபெறும் போட்டியில் இலவசமாகப் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். மேலும் 2018 ஆம் ஆண்டு தாகர் போட்டியில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணி அணிவகுப்புக்கு முன்னிலை வகிக்கும் ஜோகுயும் ரோட்ரிகஸ் கூறுகையில், இப்போது தொடங்கப்படவுள்ள புதிய நிகழ்வில் பங்கேற்பதும், ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணியில் இணைந்து செயலாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா பஜாவிலும், மொராக்கோ போட்டியிலும் பங்கேற்க தயாராக இருக்கிறேன். ஹீரோ குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதும், அடுத்த ஆண்டு தாகரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதும் உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது என்றார்.

ஹீரோ மோடோ ஸ்போர்ட்ஸ் அணிக்கு முன்னிலை வகிக்கும் சி.எஸ்.சந்தோஷ் கூறுகையில், ராஜஸ்தானில் நடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இன்னும் சிகிச்சை பெற்று வருகிறேன். இப்போது நலமாக இருக்கிறேன். வரும் மே மாதம் மொராக்கோவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க முழு உடல் தகுதியைப் பெற்று விடுவேன். இந்தியா பஜாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. அதேசமயம், ஜோகுயும் ரோட்ரிகஸ் அணிவகுப்புக்கு தலைமை தாங்கி நல்ல விளைவுகளை ஏற்படுத்தித் தருவார் என்றார்.

ஸ்பீட்பிரைன் ஜிஎம்பிஎச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வுல்ப்கேங்க் பிஷ்ஷர் கூறுகையில், தாகரை நிகழ்வை வெற்றிகரமாக முடித்த பிறகு இப்போது ஏப்ரலில் நடைபெறவுள்ள இந்தியா பஜாவுக்கு எங்களது என்ஜின்கள் முன்னோக்கிச் செல்லவுள்ளன. துரதிருஷ்டவசமாக சந்தோஷ் காயம் ஏற்பட்டு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜோகுயும் ரோட்ரிகஸ் சிறப்பான பிரதிநிதியாக இருந்து தனது பங்களிப்பை அளிப்பார் என்றார்.

ஹீரோ மோடோ கார்ப் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் டாக்டர் மார்கஸ் ப்ரான்ஸ்பெர்ஜர் கூறுகையில், இந்தியா பஜா 2017-ஐ மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். ஜோகுயும் ரோட்ரிகஸ் இந்த அணிவகுப்புக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை அளிப்பார் எனவும், இந்திய ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும் எனவும் நம்புகிறோம். காயம் காரணமாக இந்த நிகழ்வில் சந்தோஷ் பங்கேற்காமல் போனது துரதிருஷ்டவசமானது. பைக் ஓட்டுபவரின் பாதுகாப்பை மனதில் கொண்டும், அணியின் நீண்டகால நலனை கருத்தில் கொண்டும் இந்தியா பஜாவில் இருந்து சந்தோஷுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

About Ragavendhar

Check Also

CNH Industrial launches interactive education program across 77 schools in India

New Delhi / Chennai, March , 2019 CNH Industrial (NYSE: CNHI /MI: CNHI) and its …