Saturday , December 15 2018
Home / District-News / இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310: நம்ப வேண்டம் என்கிறது எச்எம்டி குளோபல்

இந்தியாவில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310: நம்ப வேண்டம் என்கிறது எச்எம்டி குளோபல்

201704251713276793_Nokia 3310._L_styvpf
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படும் நோக்கியா மொபைல் போன்களின் அதிகாரப்பூர்வ விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் ஏப்ரல் 28-ந்தேதி விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது.

இந்நிலையில் நோக்கியா 3310 மொபைல் போன் இந்திய ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்லது. ரூ.3,899 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதனை மே 5-ந்தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் மே 17-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கியா போன்களை விற்பனை செய்யும் உரிமம் கொண்டுள்ள எச்எம்டி குளோபல், இந்த தகவலை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

About Ragavendhar

Check Also

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் இரத்த தான முகாம்

சென்னை ஐசிஎப் காந்தி நகர் நன்னல மையம்  பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதியில் மாபெரும் இரத்ததான  …