Tuesday , September 25 2018
Home / EDUCATION / இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் 2587 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தந்து விருந்தோம்பல் துறையில் புதிய சாதனை படைத்தது, சென்னைஸ் அமிர்தா!

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் 2587 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தந்து விருந்தோம்பல் துறையில் புதிய சாதனை படைத்தது, சென்னைஸ் அமிர்தா!

Offer Letter Handover Photo - Chennais Amirta
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் (Chennais Amirta International Institute of Hotel Management) கல்லூரியில், அண்மையில் 3 நாட்களாக (மார்ச் 15 முதல் 17 வரை) வேலை வாய்ப்புக் கண்காட்சி முகாம் நடைபெற்றது. இதில் இக்கல்லூரியின் 2587 மாணவர்கள் வேலை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களில், உணவு பரிமாறும் (Food & Beverages) துறையில் 1090 பேருக்கும், வரவேற்பு (Front Office) துறையில் 185 மாணவர்களுக்கும், பராமரிப்பு (House Keeping) துறையில் 499 பேருக்கும், உணவு மற்றும் அடுமணை (Food Production including Bakkery) துறையில் 813 மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. இதில் இரண்டாண்டு ஐ.பி.டி (IPD – Institute of Professional Development) Executive Diploma பாடப்பிரிவில் இறுதி ஆண்டு பயிலும் ஜெ. மீனா என்ற மாணவி அதிகபட்சமாக ரூ. 20,000 மாத சம்பளத்தில் கேரள மாநிலத்தின் நட்சத்திர ஹோட்டலான `கீஸ் கொச்சியில்’ (Keys Kochi) வேலை பெற்றுள்ளார்.

இது குறித்து இக்கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி திரு. ரா. பூமிநாதன் கூறியதாவது, “சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்புக் கண்காட்சியில், சென்னை, மும்பை, பெங்களூரு, நாக்பூர், ஜெய்ப்பூர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சின், கோவா, மதுரை, கோவை, அந்தமான், மைசூர் ஆகிய நகரங்களில் இருந்து பங்கு பெற்ற 180-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளன.

சென்னையைச் சேர்ந்த புகழ் பெற்ற ஐ.டி.சி. கிராண்ட் சோழா, தாஜ் குரூப், ஹயாத் ரிஜென்சி, தி பார்க், ஓபராய் குரூப், ரெயின் ட்ரீ, ஷாங்ரி லா, ராடிசன் ப்ளூ உள்ளிட்ட முன்னணி ஸ்டார் ஹோட்டல் நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை வழங்கின.

ஒரு ஹோட்டல் துறை சார்ந்த வேலை வாய்ப்புக் கண்காட்சியில், இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஸ்டார் ஹோட்டல் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினைக் கொடுத்தது, இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும்.

“அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில் [All India Council for Technical Education (AICTE)] அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஆண்டு தோறும் அகில இந்திய அளவில் இருபது லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழக்கமான கல்வி முறையிலிருந்து மாறுபட்டு மாணவர்கள் திறமை மேம்பட செயல்முறைப் பயிற்சி பெறுவதால் சென்னைஸ் அமிர்தா கல்லூரி மாணவர்களுக்கு இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. இது எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு பெருமிதத்தை அளிக்கிறது”. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

About Ragavendhar

Check Also

NIIT launches Career Quest in Chennai – unique Initiative to help college students identify and get prepared for their dream career

Chennai, September, 2018: NIIT Limited, a global leader in Skills and Talent Development,presentsCareer Quest in Chennai to …