Saturday , March 23 2019
Home / Launch / இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனம் துவக்க விழா

இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனம் துவக்க விழா

கோவை திருச்சி ரோட்டில் இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனம் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வங்கி உரிமையாளரும் தலைமை இயக்குனருமான பால் தாமஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
விழாவிற்கு சிறப்புவிருந்தினராக இளங்கோ பவுண்டேஷன் உரிமையாளர் இளங்கோ, ரங்கம்மாள் ஸ்டீல்ஸ் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், பேஷன் பாயிண்ட் பி.கே.ஜெகநாதன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஏ.டி.எம் மையம், லாக்கர், பணம் செலுத்தும் இடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

இசாப் வங்கி தலைமை சுவாமிநாதன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வங்கி தலைமை இயக்குநர் பால் தாமஸ் பேசுகையில் கோரளா வில் தலைமையிடமாக கொண்டு இசாப் வங்கி இதற்கு முன் இசாப் குறுநிதி நிறுவனமாக இருந்து ரிசர்வ் வங்கியின் முறையான உரிமம் பெற்று இந்தியா முழுவதும் 80 – க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவி செயல்பட்டு வருகின்றன. மார்ச் மாத இறுதிக்குள் 100-க்கும் கிளைகளை நிறுவி மக்களுக்கு சிறப்பான வங்கி சேவையைத் தருவதே தனது இலட்சியம் என்றும், வங்கி சேவை இந்தியாவிலுள்ள அனைத்து மக்களையும் சென்றடையச் செய்வதே தனது விருப்பம் என்று கூறினார்.
இதில் வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனார்.

வங்கி கிளைமேலாளர் ஷியாம்தாஸ் நன்றி கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

About Admin

Check Also

Coffee House @ Mountroad now in Teynampet

Coffee House at most happening place in Chennai INAUGURATED by Mr.Vikaramaraja Rajan, President of chamber …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.