Wednesday , May 22 2019
Home / Business / இஓஎஸ் 6டி மார்க் 2 கேமிரா அறிமுகம்

இஓஎஸ் 6டி மார்க் 2 கேமிரா அறிமுகம்

இஓஎஸ் 6டி மார்க் 2 என்ற புதிய வகை கேமிராவை கேனான் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கேமிரா புகைப்படத் துறையில் ஆர்வமிக்கவர்கள் மற்றும் அதனை தொழில் முறையாக செய்வோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், இதிலுள்ள பெரிய முழுமையான பிரேம் வசதி புகைப்படத்தில் உள்ள நுட்பத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

அதிநவீன தரமான தொழில்நுட்ப வசதியுடன் முழுமையான பிரேம் வசதி கொண்ட டிஎஸ்எல்ஆர் செயல்பாடுகள் இதில் இருக்கின்றன. இந்த கேமிரா ஆனது இலகுவான எடை கொண்டதாகவும், கைக்கு அடக்கமான வகையிலும் இருக்கிறது. 26.2 மெகாபிக்சல் வசதி உள்ளது. மிகவும் குறைவான வெளிச்சம் கொண்ட சூழலிலும் கூட தெளிவான புகைப்படங்களைப் பெற்றிட முடியும். டூயல் பிக்செல் சிஎம்ஓஎஸ் ஏஎப் தொழில்நுட்பமானது நேரடியாக காட்சிகளைப் பார்த்து படம் பிடிக்கவும், டிஜிக்7 இமேஜ் தொழில்நுட்பம் இருள் சூழ்ந்த பரப்பிலும் படங்களைப் பிடிக்க உதவுகிறது. பலவித கோணங்களில் படங்களைப் பிடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, மேல் பரப்பில் இருந்து கீழ் தளப் பரப்பு வரையில் படம் பிடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேமிரா அறிமுக நிகழ்ச்சியில் கேனான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு கசுடடா கோபயாஷி பேசியதாவது:-
புதிய இஓஎஸ் 6டி கேமிராவை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். பல புதிய புதுயுக அம்சங்களுடன் எங்களுடைய வாடிக்கையாளருக்கு சிறப்பான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பாக இஓஎஸ் 6டி கருவியானது அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதான் எல்சிடி அம்சத்துடன் கூடிய முதல் டிஎஸ்எல்ஆர் கேமிராவாகத் திகழ்ந்தது. இது மிகச்சிறந்த புகைப்படத்தை படம் பிடிக்கவும், புகைப்படத் துறையில் ஆர்வத்தை மேலிடச் செய்யவும் வழிவகை செய்தது. டிஎஸ்எல்ஆர் கேமிரா வர்த்தகச் சந்தையில் நாங்கள் முதலிடத்தைப் பிடிப்பதற்கு இது முக்கியமான காரணியாகும். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கருவி உள்பட பல புரட்சிகரமான கருவிகள் மூலமாக இந்த ஆண்டு இறுதிக்குள் டிஎஸ்எல்ஆர் கேமிரா பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடத்தைப் பிடிப்போம் என்றார்.
கேனான் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் புகைப்படப் பிரிவு மற்றும் தகவல் மையத்தின் துணைத் தலைவர் திரு எட்டி உடகாவா கூறியதாவது:-
இஓஎஸ் 6டி மார்க் 2 கருவியானது தனது கையடக்கமான வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த செயல்திறன் மூலமாக புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் அதனை தொழில் முறையாகக் கொண்டவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருக்கும். இதில் பல்வேறு விதவிதமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. முழுமையான பிரேம் சென்சார், இரட்டை சென்சார் சிஎம்ஓஎஸ் ஏஎப், பலவித கோண தொடுதிரை என பல புதிய அம்சங்கள் இதில் உள்ளன. நிழற்படம் மற்றும் விடியோ படம் எடுக்கும் ஆர்வர்களிடையே இந்தக் கருவியானது மேலும் ஆர்வத்தைத் தூண்டும் என்றார்.

புகைப்படத் துறையை தொழில் முறையாகக் கொண்டவர்கள் கேனான் இந்தியாவை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இந்தத் துறையில் ஜாம்பான்களாக விளங்குபவர்கள் இஓஎஸ் 6டி மார்க் 2 கருவியை பயன்படுத்திக் காட்டியுள்ளனர். திருமண நிகழ்வுகளை படம் பிடிப்பவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான திரு பிரகாஷ் திலோகனி, வனவிலங்குகளை படம் பிடிப்பதில் வல்லவரான திரு சந்தேஷ் கதூர் ஆகியோர் இஓஎஸ் 6டி மார்க் 2 கருவியை பயன்படுத்தி அதிகளவிலான சாதகமான கருத்துகளை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஓஎஸ் 6டி மார்க் 2
தெளிவான புகைப்படம் எடுக்கும் குறிக்கோளை பூர்த்தி செய்கிறது

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மார்க்2 கருவியில் 45 பாயிண்ட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருவியைக் கொண்டு தொடர்ச்சியாக படம் பிடிக்கலாம். அதாவது 6.5 எப்பிஎஸ் அளவு வேகத்துக்கு தொடர்ந்து படம் எடுக்கலாம். வேகமாக நகர்ந்து செல்லும் பொருள்களைக் கூட தரம் குறையாத, துல்லியத்துடன் கூடிய படத்தை படம் பிடிக்கலாம். நேரலையாகப் பார்த்து படம் பிடிக்கும் அம்சத்தின் போது 4 எப்பிஎஸ்., வேகத்துக்கு படம் எடுக்கலாம். இதில் 40 ஆயிரம் ஐஎஸ்ஓ வேகத்துக்கு கருவியை மாற்றியமைத்து துல்லியமாகவும், தெளிவாகவும் கூடிய படத்தை எடுக்கலாம். வெளிச்சம் குறைவாக இருந்தாலும் தரம் குறையாமல், தெளிவான படத்தை பிடிக்கலாம்.

விலை என்ன
இஓஎஸ் 6டி மார்க்2 கருவி தொழில்நுட்பங்களின் வசதியைப் பொறுத்து மூன்று வகையான விலைகளில் விற்பனைக்கு உள்ளது.

இஓஎஸ் 6டி மார்க் 2 பாடி: ரூ.1,32,995 (வரிகள் உள்பட சேர்த்து)
இஓஎஸ் 6டி மார்க் 2 (இஎப் 24-70 எம்எம்): ரூ.1,84,995. (அனைத்து வரிகள் உள்பட)
இஓஎஸ் 63 மார்க் 2 (இஎப் 24-105 எம்எம்): ரூ.2,02,995 (அனைத்து வரிகள் உள்பட)

 

கருவியின் சிறப்பம்சங்கள்:

இமேஜ் சென்சார் : 26.2 மெகாபிக்செல் சிஎம்ஓஎஸ் சென்சார்
இமேஜ் பிராசர்: டிஜிக் 7
ஐஎஸ்ஓ வேகம்: 100-40,000 (விரிவடையச் செய்து 50-102,400)
அதிகபட்ச விடியோ தரம்: முழுமையான எச்டி 60பி
வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ்: உண்டு
எல்சிடி 7.6 செ.மீ., 3.0 இன்ச் பல கோண தொடு திரை.
எடை : 685 கிராம் (கருவி அளவு மட்டும்)

 

கேனான் நிறுவனக் குழுமம்:
கேனான்நிறுவனமானது 1937 ஆம்ஆண்டுதொடங்கப்பட்டது. இதனுடைய சர்வதேச தலைமை அலுவலகம் டோக்கியோவில் செயல்பட்டு வருகிறது.மேலும் மண்டல தலைமை அலுவலகங்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களிலும், ஜப்பானில் செயல்பட்டு வரும் மண்டல தலைமை அலுவலகம் சர்வதேச, உள்ளூர் சந்தையாளர்களை ஒருங்கிணைக்கிறது. கடந்த 1996 ஆம்ஆண்டில் சர்வதேசஅளவில் புகைப்படம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை உலகுக்குஎடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சர்வதேச நிறுவனத் திட்டத்தைச் செயல்படுத்தியது. நடப்பாண்டில் 5 அம்ச திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. 317 துணை நிறுவனங்களுடன் 1 லட்சத்து 89 ஆயிரத்து 571 பணியாளர்களைக் கொண்டு கேனான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கேனான்இந்தியாநிறுவனம்:
கேனான்சிங்கப்பூர்நிறுவனத்தின் 100 சதவீத மானியத்துடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 1997 ஆம்ஆண்டில் 200 வகையான நவீன தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் கருவிகளுடன் இந்தியாவில் வணிகத்தைத் தொடங்கியது. இப்போது இந்தியாவில் 14 அலுவலகங்கள், கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கேனான்நிறுவனமானது 500 தொடக்கபங்குதாரர்களையும், 14 தேசியஅளவிலானசில்லறைவிற்பனைபங்குதாரர்களையும், 6 ஆயிரம் இரண்டாம்நிலைசில்லறைவர்த்தகமுனையதாரர்களையும் கொண்டிருக்கிறது. நாட்டில் 229 தனது சொந்த சில்லறை வர்த்தக நிறுவனத்தை கேனான் நடத்தி வருகிறது. கேமிராக்கள்பழுதுநீக்கும் 18 மையங்கள்முலம் 5 நகரங்களிலும், 37 பிரிண்டிங் தொழில்நுட்பமையங்கள் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. கேனான் இந்தியா நிறுவனம் 141 அங்கீகரிக்கப்பட்டசேவைமையங்களைபுகைப்படபிரிண்டிங்குக்கும், 195 கேமிராகலெக்ஷன் முனையங்களையும் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 348.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

About Admin

Check Also

SPAR HYPERMARKET GIVES AWAY 1200 MOVIE VOUCHERS

SPAR Hypermarket, one of India’s fastest-growing retail chains, has partnered with Coke and Pepsi for …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.