Thursday , March 21 2019
Home / Tamilnadu Police / ஆயிரம்விளக்கு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 13 நபர்கள் கைது.

ஆயிரம்விளக்கு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 13 நபர்கள் கைது.

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

அதன்பேரில், கு-4 ஆயிரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (25.1.2018) இரவு ஆயிரம்விளக்கு பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆயிரம் விளக்கு, சுதந்திரா நகர், எண்.358 என்ற முகவரியில் உள்ள வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.அருண், வ/24, த/பெ.ஜெயவேல் , சுதந்திரா நகர், ஆயிரம்விளக்கு 2. ரகுமான், வ/33, த/பெ.ஷெரிப் பார்க்டவுன் 3.ரகீம், வ/34, த/பெ.அமீர்கான், புதுப்பேட்டை 3.ரஞ்சித், வ/38, த/பெ.முருகேசன், ஆயிரம்விளக்கு 4.அப்துல்ரஹீம், வ/36, த/பெ.அப்துல்லா, புதுப்பேட்டை 5. வினோத், வ/23, த/பெ.செல்வம், எழும்பூர் 6.ரஞ்சித், வ/38, த/பெ.முருகேசன், ஆயிரம்விளக்கு 7.தெய்வசிகாமணி, வ/40, த/பெ.கிருஷ்ணன், மாதவரம் 8.முகமது சித்திக், வ/28, த/பெ.பீர்முகமது, புதுப்பேட்டை 9.அசாருதீன், வ/32, த/பெ.பக்ருதீன், புதுப்பேட்டை 10.துளசி, வ/25, க/பெ.அப்துல்கனி, பார்டர் தோட்டம் 11. கோமளா, வ/30, த/பெ.கோதண்டம், பார்டர் தோட்டம் 12.சோபனா, வ/33, க/பெ.பகவான், ராயப்பேட்டை 13. வசந்தி, வ/34, த/பெ.தம்பிதுரை, ஆயிரம் விளக்கு ஆகிய 13 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4510/- மற்றும் 2 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

About Admin

Check Also

443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.