Sunday , June 16 2019
Home / Business / ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்தின் பிளாக்பெர்ரி கீ 2 செல்போன் இந்தியாவில் அறிமுகம்!

ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்தின் பிளாக்பெர்ரி கீ 2 செல்போன் இந்தியாவில் அறிமுகம்!

சென்னை– 2018 இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் (Optiemus Infracom),பிளாக்பெர்ரி தொலைப்பேசிகளை இந்தியாவில் தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. அதையொட்டி,தற்போது பிளாக்பெர்ரி கீ (BlackBerry® KEY2) என்ற பெயரிலான – புதுவகை கீ போர்ட் கொண்ட ஒரு ஸ்மார்ட் போனை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு உன்னத செயல்திறனுடன்மிகச் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் போன்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம்இதற்காக பிளாக்பெர்ரியிடமிருந்து மிகச் சிறந்த மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றுள்ளது.

தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் (Noida) செயல்படும் இதன் தொழிற்சாலையில் இந்த பிளாக்பெர்ரி கீ ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின்மேக் இன் இந்தியா‘ திட்டத்திற்கு துணை நிற்கும் வகையில்ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது எனவும் சொல்லலாம். பிளாக் பெர்ரி கீ 2ஸ்மார்ட்போனில்அண்மைக்கால சந்தை வரவான ஆன்ராய்ட் 8.1ஓரியோ என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருளுடன்கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட நவீன கேமராவும் இடம்பெற்றுள்ளது. அவ்வகையில்,அடுத்த கட்டத்தை குறிவைக்கும் உயர் செயல்திறன் கொண்டவர்,உயர் பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படுவோர்மற்றும் அதிக தனியுரிமையை நாடும் நபர் போன்றவர்களை மனதில் கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக அறிமுகமாகும் பிளாக்பெர்ரி கீ ஸ்மார்ட் போனில்,ஸ்பீட் கீ (Speed Key) என்ற புதிய அம்சம் ஒன்றும் அறிமுகமாகிறது. அதனால்ஒரு வாடிக்கையாளர் போனின் எந்த பகுதியில்… எந்த பயன்பாட்டில் இருந்தாலும் – உடனடியாகதான் விரும்பும் வேறு அப்ளிகேஷனுக்கோ…. முகவரிகளுக்கோ… அல்லதுமற்ற வசதிகளைப் பயன்படுத்தவோ மாறிக்கொள்ள முடியும். அதோடு,நமது முன்புறம் உள்ள காட்சியை படம் எடுக்க மட்டுமேஇரண்டு கேமராக்களைக் கொண்ட (Dual-rear camera) முதல் பிளாக் பெர்ரி ஸ்மார்ட்போன் இதுதான்.

ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு. ஹர்தீப் சிங் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து பேசுகையில், “சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தனிநபர் பற்றிய தகவல்கள்அதற்கான விதிமுறைகளை மீறி,மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன என்ற உலகலாவிய நடப்பும்அதில் இந்தியர்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன என்ற செய்திகளும் பொதுவாகவே செல்போன் வாடிக்கையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளன. அதனால்பலரும் தங்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து… குறிப்பாக மொபைல் போன்களின் மூலம் களவாடப்பட இடம்தரக் கூடாது என எண்ணுகின்றனர். அதற்கு பிளாக்பெர்ரி கீ ஒரு நல்ல தீர்வு. இதில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதுடன்,மிகச் சிறந்த தகவல் திருட்டு தடுப்பு முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடுபிழையின்றி மிகச் சரியாகவும்எளிதாகவும் தகவல்களை உள்ளிட உதவும் – நவீன கீ போர்ட் இடம்பெற்றுள்ளது. மேலும்,ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்ய (Multi-tasking) இது ஏற்றது என்பதால்அத்தகைய திறனை விரும்புவோருக்கு இந்த போன் உகந்தது. அதன் நேர்த்தியான,உயர்தர வடிவமைப்புஅதிகத் திறனுடன் கவர்ந்திழுக்கும் திறன் மற்றும் ஸ்டைல் போன்றவற்றால் எங்களது வாடிக்கையாளர்கள் இந்த போனை விரும்புவார்கள் என நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும்மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவின் பொதுமேலாளருமான திரு. அலெக்ஸ் தர்பர் (Mr. Alex Thurber) பேசுகையில், “ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்துடன் பிளாக்பெர்ரி நிறுவனம் செய்து கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தம் மூலம் சந்தை விரிவாக்கம் செய்வது எங்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்குஉலகின் மிகப் பாதுகாப்பான ஆன்ராய்ட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடிந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மொபைல் போனில் தகவல் பாதுகாப்பை சீரமைப்பது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அவ்வகையில் தற்போது பிளாக்பெர்ரி கீ போன்களை ஆப்டிமஸ் நிறுவனம் மூலம் இந்தியாவிலேயே செய்வதால்,அதன் பாதுகாப்பு திறன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டுள்ளது. மேலும்அதன் செயல்திறன் உலகமறிந்த விஷயமாக உள்ளதால்கடந்த காலங்களில்பிளாக்பெர்ரி செல்போனுக்கு உள்ள நற்பெயருடனேயே விரைவில் இந்தியாவில் வலுவாக நாங்கள் கால் ஊன்றுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என்றார்.

கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு,கூடுதல் வசதி மற்றும் உன்னத பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.

செயல்திறனில் மட்டுமின்றி,கண்ணைக் கவரும் வடிவமைப்பிலும் சிறந்ததாக உள்ள பிளாக்பெர்ரி கீ 2, வலுவான… ஆனால்மெல்லிய அலுமினிய தகடு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கையடக்கமாகபிடிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக,அதன் பின்புறம் மென்மையானதாக அமைக்கப்பட்டுள்ளது. 4.5 அங்குல தொடு திரை வசதி கொண்ட இது,கீறல் விழாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனமுன்பக்க திரை மீது,கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா பிராண்ட் கண்ணாடி (Corning® Gorilla® Glass 3) பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த போன் நீண்ட ஆயுள் கொண்டதாக அமையும். இதன் கீ போர்ட் தகவல் உள்ளிடுவதை எளிதாக்குவதுடன்செல்போனைப் பயன்படுத்தும் நபரைஅவரது கை ரேகையைக் கொண்டே உணரும் திறனும் கொண்டது. இதற்கான கூடுதல் சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ளது.

பிளாக்பெர்ரி கீ ஸ்மார்ட் போனில்,டிடெக் (DTEK) எனக் குறிப்பிடப்படும் பாதுகாப்பு அம்சம் இடம் பெற்றிருக்கும். இது இந்த போனின் அனைத்துப் பாதுகாப்பு தேவைகளையும் பார்த்துக் கொள்ளும். லாக்கர் (Locker) என்ற பெயரில் உள்ள இன்னொரு அப்ளிகேஷனும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது. அது உங்களது தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை பார்த்துக் கொள்ளும். எனவேகைரேகை அல்லது கடவு சொல் என்ற எதேனும் ஒரு வகையில் உங்களிடமிருந்து அனுமதி பெறாமல்இந்த செல்போனில் இருந்து எந்த தகவலையும்- புகைப்படம்ஆவணங்கள் எனவேறு எதையும்… யாரும் பெற்றுவிட முடியாது.

இதில் போனில் 3500 எம்.ஏ.எச் (mAh)திறனில் பேட்டரி இடம்பெற்றுள்ளது. அதனால் பலதரப்பட்ட பயன்பாட்டிலும்இது 25 மணி நேரம் வரை செயல்படக் கூடியது. இந்த போனுடன் தரப்படும் சார்ஜரால்,வெறும் 40 நிமிடங்களில்இந்த போனின் மொத்த மின்னூட்ட சேமிப்பில் 50 சதவீதத்தை பெற்றுவிட முடியும். இதன் புதிய வகை பேட்டரியும் தன்னாய்வு திறன் கொண்டிருப்பதால்அன்றாடம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் போக்கைக் கவனித்துபின்னர் அதுவேஎப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கும். இதன்மூலம் முக்கியமான கூட்டங்கள்நிகழ்வுகள்விமானப் பயணம் போன்றவற்றின்போது சிரமங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்வது எளிதாகும்.

பிளாக்பெர்ரி ஹப் என்ற தகவல் கிடங்கு (Messaging Inbox) ஒன்றும் இடம்பெறுகிறது. அதனால்சமூக வலைதளங்களில் இருந்து வரும் தகவல் உள்படமற்ற இமெயில்,குறுந்தகவல் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுதேவையானால் சேமிக்கவும் இயலும். அதோடுஜிமெயில்,யாஹூ மெயில்அவுட்லுக்போன்ற பல மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துவோர்அந்தந்த மெயில்களைப் பார்க்கஒவ்வொரு முறையும் அப்ளிகேஷன்களுக்கிடையே மாறிக் கொண்டிராமல்எளிமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் அணுக பிளாக்பெர்ரி ஹப் உதவுகிறது. அரிதான கணங்களை நினைவில் கொள்ளும் வகையில் படமாக்க இரட்டை கேமிரா.பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ரகங்களிலேயேமுதன்முறையாக இரட்டை பின்புற கேமரா மற்றும்மறுபுறம்கூடுதலாக உள்ள மற்றொரு 8 MP கேமராசெல்ஃபி என சொல்லப்படும் சுய படங்கள் எடுக்க ஏற்றது.

விலையும்விற்குமிடமும்

வரும் ஜூலை 31ம் தேதி முதல்,அமேசான் வலைதளத்தில் பிளாக்பெர்ரி கீ ஸ்மார்ட்போன் ரூ. 42,990 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போனை வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 4,450 மதிப்புள்ள திரும்பப் பெறும் (Cash Back Offer)சலுகையும்.சி..சி.வங்கி மூலம் தவணை முறையில் பணம் செலுத்தி வாங்குவோருக்கு மாதத் தவணை பரிவர்த்தனையில் 5%திரும்பப்பெறும் சலுகையுடன்,மேலும் பல அறிமுக சலுகைகளும் கிடைக்கும்.

மேலும் தகவல்களுக்கு:http://www.optiemus.com/

About Admin

Check Also

KTM hosts successful edition of Orange Day in Chennai

Chennai, 2019: KTM, the European Racing Legend, organized yet another successful version of “Orange day” for …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.